கை கால்களில் வீக்கமா? பயப்படாதீர்கள்!! இந்த கசாயத்தை மட்டும் குடித்தால் போதும்!!

0
29

கை கால்களில் வீக்கமா? பயப்படாதீர்கள்!! இந்த கசாயத்தை மட்டும் குடித்தால் போதும்!!

நம்முடைய உடம்பில் கையிலோ கால்களிலோ அல்லது முகத்திலோ திடீரென்று வீக்கம் ஏற்பட்டால் நாம் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாவோம். இதை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக கருதி மிகவும் பயப்படுவோம்.

ஆனால் இது ஒரு பெரிய பிரச்சனையை கிடையாது இதை ஆரம்ப காலத்திலேயே பார்த்து சரி செய்ய ஒரு சுலபமான டிப்ஸ் இருக்கிறது. ஒருவேளை இதை நாம் கவனிக்காமல் பெரியதாக விட்டு விட்டோம் என்றால் இதனால் பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு நம் உடம்பில் வீக்கம் வருவதற்கான காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நம் உடம்பில் எப்பொழுது சோடியம் சத்து அதிகரிக்கிறதோ அப்போதுதான் நம்முடைய உடல் பாகங்களில் வீக்கம் ஏற்படும். நாம் சாப்பிடும் உணவில் உப்பு அதிகமாக எடுத்துக் கொள்வதே இந்த சோடியம் சத்து உடம்பில் அதிகரிக்க ஒரு காரணமாகும்.

அடுத்து மிகக் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். எனவே இந்த சோடியம் தான் உடம்பில் ஏற்படக்கூடிய வீக்கங்களுக்கும் வலிகளுக்கும் காரணமாக அமைகிறது. எனவே இதை தடுக்க நாம் செய்யக் கூடியது, நம் உடம்பிற்கு எப்பொழுதுமே உப்பு ஐந்து கிராம் அளவு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேலாக நம் உப்பு எடுத்துக் கொண்டால் உடம்பில் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

அதாவது இதயம் தொடர்பான பிரச்சனைகள், கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வயிற்றில் கேஸ், அசிடிட்டி, மலச்சிக்கல் மற்றும் ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே நாம் தினமும் உப்பை குறைவாக சேர்த்துக் கொண்டு தண்ணீரை அதிகமாக குடித்து வந்தால் எந்த பிரச்சனையும் நம்மை நெருங்காது. இப்போது கை கால்களில் ஏற்படக்கூடிய இந்த வீக்கத்திற்கு ஒரு டிப்ஸை தெரிந்து கொள்வோம்.

செய்முறை:
இதற்கு நமக்கு தேவைப்படும் பொருள் தனியா அல்லது கொத்தமல்லி விதை என்று கூறுவார்கள். இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணியை ஊற்றி அதில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு கொத்தமல்லி விதையை சேர்த்து இரவு முழுவதும் நன்கு ஊர விட வேண்டும்.

காலை எழுந்தவுடன் இதை அடுப்பில் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இதை சிறிதளவு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது தான் குடிக்க வேண்டும். இதுபோல் தினமும் இந்த தனியா கசாயம் குடித்து வருவதால் உடம்பில் இருக்கக்கூடிய வீக்கங்கள் சுலபமாக குறையும். இந்த கஷாயம் உடம்பில் இருக்கக்கூடிய கெட்ட நீரை வெளியே அனுப்புவதற்கு மிகவும் பயன்படுகிறது. இதனால் முகம் கை கால்களில் இருக்கக்கூடிய வீக்கங்கள் வேகமாக குறையும்.

இந்த கசாயத்தின் பயன்கள்:
மேலும் கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்களும் இந்த தனியா கசாயத்தை குடித்து வரலாம். அதிக அளவு உள்ள ரத்தப்போக்கை சரி செய்யவும் இந்த கஷாயம் உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான சக்தியை இது அதிகப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த கஷாயம் மிகவும் நல்லது. இந்த தனியா கசாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வலியையும் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் இந்த தனியா கசாயம் மிகவும் நல்லது.

author avatar
CineDesk