சளி முதல் வாயுத் தொல்லை வரை அனைத்திற்கும் ஒரே தீர்வு “ஓம நீர்”!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதா?

0
53
#image_title

சளி முதல் வாயுத் தொல்லை வரை அனைத்திற்கும் ஒரே தீர்வு “ஓம நீர்”!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதா?

அதிக மருத்தவ குணம் கொண்ட ஓமத்தில் பாஸ்பரஸ், கால்சியம், கரோட்டின், இரும்புச்சத்து, தயாமின்உள்ளிட்ட பல சத்துக்கள் வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இது அல்சர், வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை போக்க சிறந்த தீர்வாக இருக்கிறது.

நவீன காலத்தில் அனைவரும் ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். துரித உணவால் ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய முடியாமல் தவித்து தவித்து வருபவர்களுக்கு ஓமம் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். அதேபோல் மழைக்காலங்களில் அனைவரையும் பாதிக்கும் சளி, இருமல், தொண்டை எரிச்சல், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்வதற்கும் ஓமம் ஒரு அற்புத மூலிகையாக செயல்படுகிறது.

தேவையான பொருட்கள்:-

*ஓமம் – 1 தேக்கரண்டி

*கரு மிளகு – 5

*வெல்லம் – சிறிதளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி ஓமம் மற்றும் 5 மிளகு சேர்த்து மிதமான தீயில் 1 நிமிடம் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து அதை நன்கு ஆறவிடவும். அடுத்து ஒரு உரல் எடுத்து அதில் ஆறவைத்துள்ள பொருட்களை போட்டு இடித்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் இடித்து வைத்துள்ள ஓமம் + கரு மிளகு துளை சேர்த்து கொதிக்க விடவும். இவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து பருகவும். இவ்வாறு செய்தோம் என்றால் உடலில் உள்ள மொத்த பிரச்சனைகளும் குணமாகி விடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*ஓமம் – 1 தேக்கரண்டி

*மோர் – 1 கிளாஸ்

*சீரகம் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1 தேக்கரண்டி ஓமம் சேர்த்து மிதமான தீயில் கருகி விடாமல் வறுத்து அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு உரலில் போட்டு இடித்து கொள்ளவும். இந்த ஓமம் + சீரகத் தூளை மோரில் கலந்து பருகினால் வாயுத் தொல்லை, வயிறு மந்தம், உடல் சூடு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.