தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

0
73
Petrol bomb attack in Tuticorin district! People in the area in fear!
Petrol bomb attack in Tuticorin district! People in the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் தன பாண்டியன். இவர் மரம் விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் செல்வகணேஷ் (24). செல்வகணேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அன்று இரவு முகமூடி அணிந்து மூன்று மர்ம நபர்கள்  அரிவாள் மற்றும் பெட்ரோல் குண்டுடன் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.

மேலும்  செல்வகணேஷ்  வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த செல்வகணேசன் மோட்டார் சைக்கிளின் மீது அரிவாளால் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர் பின்னர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து மர்மன் அவர்கள் தப்பி சென்றுள்ளனர். பெட்ரோல் பங்க் மோட்டார் சைக்கிளின் மீது பட்டவுடன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மேலும் இந்நிலையில் பெட்ரோல் குண்டு வெடித்த சத்தம் கேட்டு செல்வகணேஷ் குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் தீ பற்றி எழுதுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கிறார் மேலும் மோட்டார் சைக்கிளின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும்  அந்த தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் அந்த விசாரணையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து குற்றவாளிகளை கண்டுபிடித்தனர். இந்த குற்றவாளிகள் தூத்துக்குடி எம்பி காலனி நாலாவது தெருவை சேர்ந்த மாரியப்பன் மாடசாமி (26), சுப்புராஜ் (23) மற்றும் அண்ணா நகரை சேர்ந்த கணேசன் (21). என தெரிய வந்தது.

மேலும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்த   நிலையில் கணேசனுக்கும் மாடசாமிக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் ஏற்பட்டதாகவும் இதனால் மாடசாமி நண்பர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் கொண்டு வீசி இருப்பதும் தெரிய வந்தது. இதனால் மாடசாமி, சுப்புராஜ், கணேசன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K