அடமானத்தில் இருந்த கவிஞர் வீடு! உதவிய பொன்மனச் செம்மல்!

0
191
#image_title

புலமைப்பித்தன் என்ற கவிஞரை அறியாமல் இருப்பவர்கள் யாரும் இல்லை. எத்தனையோ எம்ஜிஆர் படங்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். கோயமுத்தூரில் பிறந்த இவர் இயற்பெயர் ராமசாமி. இவர் சினிமா படத்தில் பாடல்கள் எழுத வேண்டும் என்பதற்காக சென்னை வந்தார்.

 

தொடக்கத்தில் இருந்தே திமுக தொண்டராக இருந்துள்ளார் புலமைப்பித்தன். அரசியலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கொலை செய்யப்பட்ட திமுக தொண்டர் குடும்பத்திற்கு நிதி வழங்க புலமைப்பித்தன் அவர்கள் வசூல் செய்தார். அப்படி வசூல் செய்த பணம் போதவில்லை என்று தன் கையில் இருந்த பணத்தை எம்ஜிஆர் போட்டு நிதி வழங்கினார். இதை புலமைப்பித்தன் அவர்கள் சொல்லி இருக்கிறார். அப்பொழுதுதான் இருவரின் சந்திப்பு ஏற்பட்டுள்ளது.

 

எம்.ஜி.ஆர். நடித்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு புலமை பித்தனுக்கு கிடைத்தது. ‘நான் யார், நான் யார், நீ யார்?… ’ என்ற கருத்து மிக்க அவரது முதல் பாடலே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘ஆயிரம் நிலவே வா…’, ‘இதயக்கனி’ படத்தில், ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற…’, ‘ பல பாடல்களை புலமைப்பித்தன் எழுதி இருக்கிறார்.

 

கோயமுத்தூரில் பள்ளிபாளையம் என்ற ஊரில் புலமைப்பித்தன் அவர்களின் சொந்த வீடான பூர்வீக வீட்டை அவரது தந்தையார் 1967 ஆம் ஆண்டு அடமானம் வைத்தார். அடுத்த ஆண்டு அவரின் தந்தை இறந்து விட்டார். 1971 ஆம் ஆண்டு கொடுத்த கடனை அனைத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் வீடு கடன் கொடுத்தவருக்கு சொந்தமாகிவிடும்.

 

அந்த காலகட்டத்தில் புலமைப்பித்தன் ஒரு சில பாடல்கள் மட்டுமே எழுதி கொண்டிருந்தார். போதிய வருமானம் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் எம்ஜிஆரை சென்று பார்க்கலாம். உதவுவார் என்று எண்ணம் அவரிடையே தோன்றியிருக்கிறது.

 

வாகினி ஸ்டூடியோவில் படபடப்பில் இருந்த எம்ஜிஆரை காண புலமைப்பித்தன அவர்கள் சென்றிருக்கிறார். வீடு அடமானத்தில் இருக்கிறது. உரிய பணத்தை உரிய நேரத்தில் செலுத்தாவிடில் வீடு கடன் கொடுத்தவருக்கு சொந்தம் ஆகிவிடும் என, வந்த காரியத்தை திக்கித் திணறி எப்படியோ எம்ஜிஆர் இடம் சொல்லிவிட்டார்.

 

அடுத்த வினாடியே பணம் நான் தருகிறேன் என்ற பதில் எம்ஜிஆர் இடம் இருந்து வந்துள்ளது. உடனே ‘அண்ணே இல்லை ,பாடல்கள் மட்டும் கூடுதலாக வரும் படி ஏற்பாடு செய்யுங்கள்” அது போதும்! என்று சொல்லி இருக்கிறார். அதற்கு எம்ஜிஆர் ஏன் உங்கள் தவிப்பில் எனது பங்கு இல்லையா !நான் உங்களுக்கு ” பணமும் தருகிறேன் பாடலும் தருகிறேன் “என்று கூறி அவர் பணம் தந்துள்ளார்.

 

பத்திரத்தை மீட்டு சென்னை வந்த புலமைப்பித்தன் அவர்கள் நேரடியாக எம்ஜிஆரை சந்தித்து அவரது காலடியில் பத்திரத்தை வைத்து வணங்கினார்.

 

அதிமுக கட்சி உருவான முதலில் இருந்து புலமைப்பித்தன் அவர்கள் எம்ஜிஆருடன் இணைந்து இருந்தார். 1977 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தவுடன் சட்டமன்ற மேலவை உறுப்பினராக புலமைப்பித்தனை எம்ஜிஆர் அவர்கள் நியமித்தார். மேலும் 1984 ஆம் ஆண்டு சட்டப்பேரவை கவிஞராகவும் புலமைப்பித்தனை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுபோன்று ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட உதவிகளை எம் ஜி ஆர் அவர்கள் செய்துள்ளார். அதனால் தான் அவரை பொன்மனச் செம்மல் என்று

அழைக்கிறோம்.

 

author avatar
Kowsalya