பொது மக்களுக்கு எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு மழை!!

0
27

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு மழை!! 

15 மாவட்டங்களுக்கு இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாட்டில் இன்று அடுத்து 3 மணி நேரத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவி வருகிறது. அதையடுத்து மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று   முதல் 7 நாட்களுக்கு  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால் இன்று 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளன.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.

மேலும் வானமானது காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதால் பொதுமக்கள் யாரும் மின்கம்பங்களின் அருகிலோ அல்லது மரத்தின் அடியிலோ நிற்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தனது செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.