இதுதான் கோலி, ரோஹித்துக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்… ரவி சாஸ்திரி கருத்து

0
74

இதுதான் கோலி, ரோஹித்துக்கு கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்… ரவி சாஸ்திரி கருத்து

இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா குறித்து ரவி சாஸ்திரி தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

முதல் டி 20 உலகக்கோப்பையின் சாம்பியனான இந்திய அணி அதன் பின்னர் 15 ஆண்டுகளாக இன்னும் டி 20 சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் தயாராகிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணி குறித்து பேசியுள்ளார். அதில் “கடந்த ஏழு ஆண்டுகளாக பயிற்சியாளராக நான் இந்திய கிரிக்கெட் அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தேன், இப்போது அதை வெளியில் இருந்து பார்க்கிறேன், இளைஞர்கள், அனுபவம், இந்த வடிவத்தில் உச்சத்தில் இருக்கும் வீரர்களை நீங்கள் பார்த்தால், இந்தியாவுக்கு கிடைத்த வலுவான பேட்டிங் வரிசை இப்போது இருப்பதுதான்.

என்ன இருந்தாலும், இந்த உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா ஒரு புதிய அணியாக உருவாகிக் கொண்டு இருப்பதை நான் காண்கிறேன். 2007 இல் சென்ற அணியைப் போலவே – டெண்டுல்கர், டிராவிட் மற்றும் கங்குலி இல்லாமல் உலகக்கோப்பைக்கு சென்ற அணி போல. அதே மாதிரி நடக்கலாம். கோலி, ரோஹித் ஷர்மா அதற்கு சரியானவர்கள் இல்லை என்பதல்ல, ஆனால் மற்ற இரண்டு வடிவங்களுக்கும் நீங்கள் அவர்களை விரும்புகிறீர்கள், அடுத்த ஆண்டு உலகக் கோப்பை வரவிருக்கிறது, எனவே அந்த வீரர்களை நீங்கள் சுமக்க விரும்பவில்லை.” என கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு இதுவே கடைசி டி 20 உலகக்கோப்பை தொடராக இருக்குமென்று அவர் கூறியுள்ளார்.