இனிமேல் டெலிவரி பாய் கிடையாது, டெலிவரி ரோபோ தான்

0
88

இனிமேல் டெலிவரி பாய் கிடையாது, டெலிவரி ரோபோ தான்

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்ய டெலிவரி பாய்ஸ் என்ற பணியாளர்களை நியமித்துள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வருங்காலத்தில் டெலிவரி செய்ய பணியாளர்களுக்கு பதில் ரோபோக்களை பழக்கப்படுத்த ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் முதல் படியாக ரஷ்யாவில் உள்ள யாண்டெக்ஸ் என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ரோவர் என்ற ரோபோவை தயாரித்துள்ளது.

சூட்கேஸ் அளவில் இருக்கும் இந்த ரோபோ மிகச்சரியாக சாலைகளில் பயணித்து வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு மீண்டும் அதே வழியில் திரும்பி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூகுளின் ஆட்டோமேட்டிக் காரில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்தான் இந்த ரொவர் ரோபோட்டில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதனால் இந்த ரோபோ வாடிக்கையாளர் இருக்கும் தூரத்தை சரியாக கணக்கிடவும், இருட்டில் பயணம் செய்யவும் பயணம் செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ரோபோவின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து மிக விரைவில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்ய இந்த ரோபோ பயன்படுத்தப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஷ்ய நிறுவனத்தின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் பிளிப்கார்ட் அமேசான் உள்பட ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களும் இதே முறையை வெகுவிரைவில் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
CineDesk