ஆசிரியர் தினத்தில் அயராத அர்ப்பணிப்புக்காக அவர்களை வணங்குகிறேன் – பிரதமர் மோடி ட்வீட்!!

0
43
#image_title

ஆசிரியர் தினத்தில் அயராத அர்ப்பணிப்புக்காக அவர்களை வணங்குகிறேன் – பிரதமர் மோடி ட்வீட்!!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.இந்நிலையில் ஆசிரியர் தினமான இன்று நாட்டின் பல்வேறு தலைவர்களும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் பிரதமர் மோடி அவர்கள் ஆசிரியர் தின நாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து நம் எதிர்காலத்தை சிறப்பானதாக உருவாக்கி வரும் ஆசிரியர்களின் அயராத அர்ப்பணிப்புக்காக அவர்களை வணங்குவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கருத்து பதிவில்,
“நமது எதிர்காலத்தை உருவாக்குவதிலும்,கனவுகளை ஊக்குவிப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.இந்த ஆசியர் தின நாளில் அவர்களின் அயராத அர்ப்பணிப்புக்கும், அவர்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் சிறந்த தாக்கத்துக்கும் நாம் அவர்களை வாழ்த்தி வணக்குவோம்.டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் மிக உயரிய விருதான ‘தேசிய நல்லாசிரியர்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை புதுடில்லியில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து பிரதமர் மோடி நடத்திய உரையாடலின் வீடியோவினை தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதில் ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பை கொண்டாடுவதே,நல்லாசிரியருக்கான விருது வழங்கப்படுவதன் நோக்கம் ஆகும்.ஆசிரியர்கள்,நம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

மாணவர்களின் கல்வித்தரத்தை மட்டுமின்றி,அவர்களின் வாழ்வை வளப்படுத்துவதிலும், ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது என்பதை கவுரவிக்கவும், இந்த விருது வழங்கப்படுகிறது. என்று அதில் பிரதமர் மோடியின் உரையாடல் இருந்தது.

மேலும் இந்த ஆண்டு 75 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இன்று புதுடில்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் ஆசிரியர் தின விழாவில்,ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.