இனி அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! அரசு திடீர் அறிவிப்பு!!

0
31
Same syllabus in all colleges now!! Government sudden announcement!!
Same syllabus in all colleges now!! Government sudden announcement!!

இனி அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! அரசு திடீர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கைய மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது.

தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இதுவரை மட்டும் 84899 இடங்கள் நிரப்பப்பட்டது அதில் 36626  மாணவர்கள் மற்றும் 48275 மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்த்துள்ளனர்.

இந்தநிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு வருகின்ற ஜூலை 1 ம் தேதி துவங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரிகளும் தொடங்கப்பட உள்ளதால்  மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.அடுத்த கட்டமாக தேர்வுகள் நடத்தப்பட்ட உள்ளதால் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக மற்றும் எழுத்து தேர்வு என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றது.

இன்று வரை வெய்ட்டேஜ் மதிப்பெண் முறை தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பின்பற்றப்படுகின்றது.இதனை மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.அந்த வகையில் இனி 75:25  என்ற அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

மேலும் அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும்  75 சதவீதம் ஒரே மாதிரியான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த முறை அடுத்த கல்வியாண்டிற்கு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதிலும் தனியார் கல்லூரிகள் 25 சதவீத பாடத்திட்டத்தை  கட்டாயம் மாறுதல் செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K