விரைவில் பாடநூல் முடிவு, பள்ளிகளும் திறப்பு?! எப்போது தெரியுமா?!

0
72

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து கொரோனாவுக்கு எதிராக மிகப் போராடி வருகிறார். மேலும் ஆட்சி அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள் நியமிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை பாடநூல் மற்றும் கல்வியில் கழகத் தலைவராக லியோனி பொறுப்பேற்றுக் கொண்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடன் இருந்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய லியோனி ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 2011ஆம் ஆண்டு பாடப் புத்தகத்தை எடுத்தேன். மீண்டும் 2021ல் கையில் எடுத்துள்ளேன். பாடநூல்களை மாணவர்கள் மிகவும் விரும்பி மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் மாற்றுவது தான் எனது நோக்கம் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் நான் மாணவராக இருந்த காலத்தில், அறிஞர் அண்ணாவின் பேச்சு பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது எனவும், மேலும் அவர் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகளில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

மேலும், இதனைத் தொடர்ந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் அனைவரையும் பாஸ் போட்ட காரணத்தால் போன வருடம் வேகமாக சென்று விட்டது. ஆனால், இந்த வருடம் கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்படும் என தகவல் வெளி வந்துள்ளது.

author avatar
Jayachithra