அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!

0
136
#image_title

அமைச்சர் துரைமுருகன் குறித்து அவதூறு கருத்து!!

சிறையில் உள்ள அதிமுக ஐடி விங் நிர்வாகிக்கு ஜாமீன் வழங்கி காட்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடந்த மார்ச் 29 ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றும்போது, ‘‘நான் நீண்ட நெடுங்காலம் தி.மு.க-வில் இருப்பவன்.

இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்றாவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என ஒருவரி எழுதினால் போதும்’’ என்று உருக்கமாகப் பேசினார்.

இந்த வார்த்தைகளை திரித்து அ.தி.மு.க ஐ.டி விங் நிர்வாகியான பொள்ளாச்சி அருண்குமார் என்பவர், அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை தவறாக சித்தரித்து தனது ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்தப் பதிவு வைரலான நிலையில், தி.மு.க தரப்பில் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி காவல் நிலைய போலீசார் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐடி நிர்வாகி அருண்குமாரை ஜாமினில் விடுவிக்க வேண்டி காட்பாடி நிதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில் காலை முதல் மதியம் சுமார் இரண்டு மணி வரை போலீசார் சார்பில் ஜாமீன் மனு மீது எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படாமல் இருந்தது.

அதற்கு அதிமுக தலைமை கழக சட்ட ஆலோசகர் இன்பதுரை கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக காவல்துறை சார்பில் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டுக்கொண்ட பிறகு அதிமுக ஐடி விங் நிர்வாகி அருண்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நாளை அருண்குமார் சிறையிலிருந்து வர உள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

author avatar
Savitha