பட்டமளிப்பு விழாவில் மாணவர் சங்கத் தலைவர் அவமரியாதை! டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் போராட்டம்

0
134
#image_title

பட்டமளிப்பு விழாவில் மாணவர் சங்கத் தலைவர் அவமரியாதை! டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் போராட்டம்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் அவமரியாதை செய்யப்பட்டதாக கூறி தஞ்சை டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ள தடுப்புகளை தாண்டி போராட்டத்தால் தஞ்சாவூரில் பரபரப்பு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 13-வது பட்டமளிப்பு விழா 24ம் தேதி திங்கள் கிழமை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் 300 மாணவர்களுக்கு ஆளுநர் நேரடியாகவும் 1200 மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திலும் பத்தாயிரம் மாணவர்களுக்கு அஞ்சல் மூலமாகவும் பட்டம் வழங்கப்பட்டது.

தமிழக அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் மார்க்சியத்தை பற்றி தவறாக பேசி வருவதாகவும் ஆளுநரை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் திங்கள் கிழமை புதிய பேருந்து நிலையம் அருகே கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆளுநர் பட்டமைப்பு விழாவில் கலந்து கொள்ளக் கூடாது உடனடியாக வெளியேற வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஏற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் அரவிந்த்சாமி பட்டம் பெற வந்த நிலையில் அவர் ஆளுநருக்கு எதிராக கருப்பு சட்டை அணிந்து கருப்பு பேட்ச் அணிந்து கருப்பு மாஸ்க் அணிந்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தகவல் வந்ததை எடுத்து உடனடியாக அவர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு ஆளுநர் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியே சென்றவுடன் அவர் விடுவிக்கப்பட்டார் மேலும் அவருக்கு பட்டமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய மாணவர் சங்க மாநில தலைவரை காவல்துறையினர் அவமானம் படுத்தி விட்டதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் தஞ்சை டிஐஜி அலுவலகத்தை முற்றுகையிட வந்ததை அடுத்து காவல்துறையினர் தஞ்சை நீதிமன்ற சாலையில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முற்றுகையிட வந்தவர்கள் தடுப்புகளை மீறி நேரடியாக வந்து டிஐஜி அலுவலக வாசல் முன்பு அமர்ந்து கோசமிட்டனர் இதனால் காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

author avatar
Savitha