“Son of MLA” காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்:! கலாய்த்துதள்ளும் நெட்டிசன்கள்! வைரல் புகைப்படம்!

"Son of MLA" காரில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்:! கலாய்த்துதள்ளும் நெட்டிசன்கள்! வைரல் புகைப்படம்!

பொதுவாகவே அரசியல்வாதிகளும் பிரபலங்களும் சமூகத்தில் தனியாகத்தான் தெரிவர்.அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கவனிப்பே தனியாகத்தான் இருக்கும். இந்நிலையில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் சென்ற ஒரு காரில் பின்புறக் கண்ணாடியில் ஒருவர் சன் ஆப் எம்.எல்.ஏ (son of MLA) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் காரின் புகைப்படம் தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் புகைப்படத்திற்கு மேல் இதுதான் இதுதான் நமது கலாச்சாரம் என்று … Read more

இந்திய மருத்துவர்கள் சங்கம் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!

இந்திய மருத்துவர்கள் சங்கம் கொடுத்த அதிர்ச்சி தகவல்.!

  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுக்க இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை 21,50,912 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மொத்தமாக 43,446 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 886 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல்வேறு … Read more

கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானது!!

கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானது!!

துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்திற்குள்ளானது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஏர் இந்தியா எஸ்பிரஸ் விமானம் கேரளாவில் தரை இறங்கும்போது ஓடுதளத்தில் விபத்து ஏற்பட்டது. தரையிறங்கும் நேரத்தில் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டு தரையிறங்க முடியாத நிலை நீடித்துள்ளது. இதனால் விமானம் சிறிது நேரம் பறந்தபடியே இருந்துள்ளது. இதையடுத்து மீண்டும் 2வது முறை விமானம் தரையிறங்க முற்பட்டுள்ளது. அப்போதுதான் விமானம் தரையில் … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது

இந்தியாவில் கடந்த 21 நாட்களில் மிக அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நேற்று முன்தினம் இரவு 20 லட்சத்தை கடந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி நிலவரங்கள் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட அறிக்கையின்படி வெள்ளிக் கிழமை காலை 8 மணி நிலவரப்படி, நாட்டில் புதிதாக 62,538 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 20,27,074 ஆக உயர்ந்துள்ளது. … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்திற்கு 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக தென் மேற்குப் பருவக் காற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் அதி கனமழையும், கோவை, தேனியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு. மேலும், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி … Read more

தொடரும் செல்போன் டவர் விபத்து!! திருப்பூரில் சோகம்..

தொடரும் செல்போன் டவர் விபத்து!! திருப்பூரில் சோகம்..

திருப்பூரில் நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாத 80 அடி உயரமுள்ள செல் டவர் சரிந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சாலையில் தமிழ்நாடு திரையரங்கம் அருகே நீண்டகாலமாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் மிகவும் பழுதடைந்த நிலையில் செல்போன் டவர் ஒன்று இருந்தது. அந்த சாலையில் தினமும் நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத போது திடீரென அந்த செல்போன் டவர் சாலையில் சரிந்து விழுந்தது விபத்திற்க்குள்ளானது. இதனால் … Read more

ஆகஸ்ட் 20 அன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! காரணம்?

ஆகஸ்ட் 20 அன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! காரணம்?

சென்னை: அனைத்து வங்கி கிளைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் (100%) பணிக்கு வர வேண்டும் என்ற மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பால் போடப்பட்ட உத்தரவை எதிர்த்து, வரும் 20ஆம் தேதி அன்று வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் இ.அருணாச்சலம் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில், வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது போக்குவரத்திற்கும் அனுமதி … Read more

போலீசுக்கு கொலை மிரட்டல்!! யார் அந்த நபர்?

போலீசுக்கு கொலை மிரட்டல்!! யார் அந்த நபர்?

காட்டுமன்னார்கோவிலில் போலீசாருக்கு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த, லாட்டரி சீட்டு விற்பனையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலுார் மாவட்டம்: காட்டுமன்னார்கோவிலில் சில மாதங்களாக தலைமறைவாக இருந்த லாட்டரி டிக்கெட் விற்பனையாளர் தற்போது மீண்டும் விற்பனை செய்து வருகிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் மற்ற போலீசார் லாட்டரி தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, திருமூலஸ்தானம் ரோடு ஞானவிநாயகர் கூட்டுறவு சங்கம் எதிரில் நபர் ஒருவர் … Read more

புது சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்! அண்ணா பல்கலைக்கழகம்

புது சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினர்களை சமீபத்தில் தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் பனிமலர் கல்விக் குழுமத்தின் தாளாளரும், செயலாளருமாக செயல்பட்டு வரும் ப.சின்னதுரை அவர்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினராக தமிழக அரசு நியமித்துள்ளது. இதையொட்டி அவருக்கு பனிமலர் கல்வி குழுமத்தின் முதல்வர்கள், மேலாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

போட்டிகளில் கலந்துகொள்ள தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு: கோமதி மாரிமுத்து!

போட்டிகளில் கலந்துகொள்ள தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு: கோமதி மாரிமுத்து!

ஓட்டப் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ள 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்ட கோமதி, அத்தடையை எதிர்த்து விளையாட்டுத் துறைக்கான நடுவர் நீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து கடந்த ஆண்டு தோகாவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று தங்கம் வென்றார். ஆனால் இந்தப் போட்டியில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து நடந்த அடுத்தக்கட்ட சோதனையில் கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதனால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதாவது 2023 மே 16 வரை நடக்கும் போட்டிகளில் அவர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள், பணம் மற்றும் இதர ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஆனால் இதனை ஆரம்பத்திலிருந்தே முற்றிலுமாக மறுத்து வந்த கோமதி, தற்போது ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்துகொள் தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து விளையாட்டுத்துறைக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.