வீட்டில் கரையான் தொல்லையா? இதை மட்டும் செய்தால் ஒரு கரையான் கூட தப்பிக்காது திரும்பவும் வராது

0
299
Termite problem at home? Just try this and you will be completely destroyed
Termite problem at home? Just try this and you will be completely destroyed

வீட்டில் கரையான் தொல்லையா? இதை மட்டும் செய்தால் ஒரு கரையான் கூட தப்பிக்காது திரும்பவும் வராது

நாம் பல லட்சங்கள் செலவு செய்து வீடு கட்டினாலும் அதிலுள்ள மரச்சாமான்களை கரையான் அரிக்காமல் பாதுகாத்து கொள்ள பலரும் சிரமப்படுகின்றனர.

அந்த வகையில் நம்மில் பல வீடுகளிலும் நாம் ஒவ்வொருவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை தான் இந்த கரையான் தொல்லை. பார்ப்பதற்கு எறும்பு போல இருக்கும் இந்த கரையானுக்கு இறக்கைகள் இருக்கின்றது. இந்த கரையான்கள் வாழ்வதற்கு ஈரப்பதம் மற்றும் இருண்ட இடம் தேவை.

அந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் மரத்தால் ஆனா பொருட்களை நீண்ட காலம் கவனிக்காமல் விட்டாலோ அல்லது ஈரப்பதம் இருந்தாலும் அங்கு சுலபமாக கரையான் வந்து விடும். மேலும் நாம் அதை கவனிக்காமல் விட்டால் மரப்பொருள் முழுவதையும் அரித்து விடும் தன்மை கொண்டது.

மேற்கூறிய சூழல் இருக்கும் நம் வீட்டு கதவு, ஜன்னல் போன்ற மரத்தால் செய்யப்பட்ட பொருட்களின் மீது நாம் இதை அதிகம் காணலாம். இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அந்த இடங்களையே முரிலும் இருந்த இடம் தெரியாமல் அழிக்கும் அளவிற்கு சென்று விடும். இதை நாம் கண்டறிந்த பின் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அதை எப்படி அழிப்பது என்பதை இங்கு காண்போம்.

முதலில் நம் வீட்டின் தரைப் பகுதி மற்றும் வெளிப்புறம் ஆகியவற்றில் சிறு துவாரங்கள் கூட இல்லாமல் முதலில் கவனித்து சரி செய்ய வேண்டும். மேலும் வீட்டில் நாம் சேர்த்து வைத்திருக்கும் பழைய மர பொருட்களை முடிந்த அளவு கட்டுப்படுத்துவதும் கரையான் வராமல் தடுக்க உதவும்.

மிளகாய்த்தூள்:

மிளகாய் தூளுக்கு கரையான்களை கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. இதற்கு காரத்தன்மை இருப்பதால் கரையானை சுலபமாக அழித்து விடும். அந்தவகையில் இவற்றை மரச்சாமான்களின் மீது தூவி விட கரையான்கள் அழிந்து போவதை நம்மால் காண முடியும்.

வேப்பிலை:

வேப்பிலை கசப்பு தன்மை கொண்டதால் இதுவும் கரையானை அழிக்க பயன்படுகிறது. அந்த வகையில் வேப்பிலையை நன்றாக பொடி செய்து கரையான்களின் இது தூவி விட்டால் அந்த கசப்பின் காரணமாக கரையான்கள் அங்கிருந்து அழிந்து விடும். இதற்கு பதிலாக வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைத்து அந்த தண்ணீரை தெளித்தாலும் கரையான்கள் செத்து விடும்.

தேங்காய் எண்ணெய், சூடம், பூண்டு கலந்த கலவை:

மேலும் தேங்காய் எண்ணெய், சூடம், பூண்டு இந்த மூன்றையும் பயன்படுத்தி கரையான்களை அழிக்க முடியும். முதலில் தேங்காய் எண்ணையை எடுத்து லேசாக சூடுபடுத்திக் கொள்ளவும். பிறகு அந்த எண்ணெயில் இரண்டு கட்டி சூடத்தை எடுத்து கரைத்து கொள்ளவும். அதில் பூண்டை நன்றாக நச்சு போடவும்.

இந்த மூன்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி கரையான் இருக்கும் சுவர்களில். கதவு ஓரங்களில், மூலை முடுக்குகளில் எல்லாம் பிரஸ் வைத்து அதை அப்ளை பண்ண வேண்டும். சிறிது நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக கரையான் காணாமல் போய்விடும்.

இவைகளை செய்த பிறகு உங்கள் வீட்டு கதவுகளிலும், சுவர்களிலும் கரையான் தொல்லை இருக்கவே இருக்காது.