கையை மீறிப்போகும் செலவை கட்டுக்குள் வைக்க முத்தான வழிகள்..!

0
116
#image_title

கையை மீறிப்போகும் செலவை கட்டுக்குள் வைக்க முத்தான வழிகள்..!

இன்றைய விலைவாசி உயர்வால் சாமானியர்கள் வாழ்க்கையை நகர்த்த கடுமையாக போராடி வருகின்றனர். உழைபிற்கு ஏற்ற ஊதியம் இல்லாமல்… குடும்ப செலவை மேனேஜ் செய்ய தெரியாமல் திணறி வருபவர்களுக்கு செலவை கட்டுப்படுத்தும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

நம்மிடம் பணம் இருக்காது… ஆனால் ஏதாவது ஒரு தேவையில்லாத விஷயத்திற்காக அடுத்தவர்களிடம் இருந்து கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கம் பலரிடம் இருக்கின்றது.

ஒருசிலர் முக்கிய தேவைக்காக பணத்தை சேமித்து வைத்திருப்பர்… ஏதேனும் தேவையற்ற செலவு வந்து விட்டால் யோசிக்காமல் பணத்தை செலவு செய்து விடுகின்றனர்.

நமக்கு ஒரு தேவை இருக்கும் பொழுது அதை நிறைவேற்றிக் கொள்ள தெரிய வேண்டும்.. அதேவேளை பணத்தையும் அதிகம் செலவு செய்யக் கூடாது.. இதற்கு “ஆல்ட்டர்நேட்டிவ் மெத்தட்” என்று பெயர்.

உதாரணத்திற்கு…

ஒரு ஆடை கிழிந்து விட்டது என்றால் அதை தூக்கி எரிந்து விட்டது புது ஆடை வாங்காமல்.. கிழிந்த ஆடையை தைத்து போட பழகுங்கள். இதனால் புது ஆடை வாங்கும் செலவு மீதம் ஆகும்.

ஒரு சிலருக்கு வாரம் வாரம் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். சிலருக்கு அடிக்கடி அசைவம் சாப்பிட ஆசை ஏற்படும். அவ்வாறு தோன்றும் பொழுது கோழி, ஆடு இறைச்சிக்கு பதில் முட்டை, மீல் மேக்கர், கருவாடு போன்ற விலை மலிவான பொருட்களை வாங்கி சமைத்து உண்ணலாம்.

வீட்டில் உள்ள பழைய நோட் புக்கை தூக்கி எரியாமல் அதில் உள்ள பயன்படுத்தாத தாள்களை மட்டும் தனியாக எடுத்து பின் செய்து நோட் போல் தயாரித்து கொள்ளவும். எதை ரப் யூசிற்கு பயன்படுத்துக் கொள்ளலாம்.

பண்டிகை நாட்களில் புது ஆடை வாங்காமல்.. உங்களிடம் உள்ள அதிகம் பயன்படுத்ததாக ஆடை இருந்தால் அதை உடுத்தலாம். இதனால் புது ஆடை வாங்கும் செலவு மீதம். இவ்வாறு பல செலவுகளை குறைக்க முடியும்.