திருட்டு வழக்கில் மாட்டிய நண்பனை ஜாமீனில் கொண்டு வர முயற்சித்த சக திருடனுக்கு நேர்ந்த கதி

0
91

திருட்டு வழக்கில் மாட்டிய நண்பனை ஜாமீனில் கொண்டு வர முயற்சித்த சக திருடனுக்கு நேர்ந்த கதி

திருட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியை நண்பனை ஜாமீன் எடுக்க முயற்சித்த போது போலீசார் பிடித்த சுவாரசிய சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் போலீசார் கடந்த 30.07.2022 அன்று 25 லட்சம் மதிப்பிலான புதிய கார் டயர்கள் கண்டெய்னர் லாரியில் இருந்து திருடிய சம்பவத்தில் பழனிச்சாமி என்ற திருடனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் திருட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த முத்து மற்றும் டேவிட்டை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று தேடப்படும் குற்றவாளியான முத்து போலீசாரிடம் சிக்கி கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி, முத்து, டேவிட், நண்பர்களான மூவரும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு பல முறை போலீசாரால் கைது செய்து சிறை சென்று வருவது இவர்களுக்கு வாடிக்கையான ஒன்றாக அமைந்துவிட்டது.

இந்நிலையில் புதிய கார் டயர் திருட்டு வழக்கில் போளூர் போலீசாரால் கடந்த மாதம் 30 ஆம் தேதி பழனிசாமி கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் தப்பி ஓடிய முத்து மற்றும் டேவிட்டை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் கைதான பழனிச்சாமியின் குடும்பத்தினரை சந்தித்து அவரை ஜாமினில் வெளிய கொண்டுவர முத்து கடந்த இரண்டு நாட்களாக பழனிச்சாமியின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறி வந்துள்ளார்.

இத்தகவலை அப்பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மற்றும் முத்துவின் தொழில் எதிரியான நபர் ஒருவர் போளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளார்.

ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் நேற்று சென்னை விரைந்து பழனிச்சாமியின் வீடு அருகே தங்கியிருந்து நோட்டமிட்டனர் அப்போது மீண்டும் அங்கு எதிர்ச்சியாக வந்த முத்துவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

திருட்டு வழக்கில் தொடர்புடைய சக திருட்டு நண்பனை ஜாமீனில் வெளியே கொண்டு வர தேடப்படும் குற்றவாளி முத்து உதவிய பொழுது போலீசிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது