மூன்றாவது அலையில் நாட்டில் ஒரு நாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்வு! இதுகுறித்து சுகாதாரத்துறை சொல்வது என்ன?

0
51

மூன்றாவது அலையில் நாட்டில் ஒரு நாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்வு! இதுகுறித்து சுகாதாரத்துறை சொல்வது என்ன?

தென் ஆப்ரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. அந்த வகையில் இந்த கொரோனா தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதியன்று இந்தியாவிலும் நுழைந்தது முதல் முறையாக கண்டறியப்பட்டது.

இதன் பின்னர் ஓமைக்ரான் பரவல் இந்தியாவில் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. இதனால் இந்த ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் இந்த ஒமைக்ரான் தொற்று பரவியிருக்கிறது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனிடையே இந்தியாவில் இந்த ஒமைக்ரான் வருகைக்கு பின்பு நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்றானது மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் தற்போது இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்த கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 532  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 82 லட்சத்து 18 ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கடந்த இரண்டு அலைகளில் இல்லாத வகையில் இந்த மூன்றாவது அலையில் ஒரு நாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சத்தை தொட்டுள்ளது.

author avatar
Parthipan K