விலை உயர்வு எதிரொலி!! திருட்டை தடுக்க விவசாயி செய்த நூதன காரியம்!!

0
38
Price hike echo!! The farmer did a strange thing to prevent theft!!
Price hike echo!! The farmer did a strange thing to prevent theft!!

விலை உயர்வு எதிரொலி!! திருட்டை தடுக்க விவசாயி செய்த நூதன காரியம்!!

தக்காளி திருட்டை தடுக்க விவசாயி ஒருவர் செய்த காரியம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தற்போது நாட்டில் எங்கும் பரபரப்பாக பேசக்கூடிய ஒரு விஷயம் தக்காளி விலை உயர்வு. தங்கத்தின் விலையில் கூட சற்று மாறுதல் உண்டு. ஆனால் தக்காளியின் விலை ஆனது வானத்தை நோக்கி நீண்டு கொண்டே போகிறது.

கடந்த சில நாட்கள் வரை தக்காளி கிலோ ரூ. 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த சூழ்நிலையில் தற்போது தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளியின் விலை ரூம் 150 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளியின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதற்கு எதிர்ப்பதமாக மக்கள் கவலை கொண்டுள்ளனர். இதன் காரணமாக விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி பழங்கள் அடிக்கடி திருடு போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களை தடுக்க விவசாயிகள் பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர்.

இருப்பினும் நிறைய இடங்களில் தக்காளிகளை திருடி அதனை சிலர் சந்தைகளில் விற்பனை செய்யும் சம்பவங்களும் நாட்டில் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் இரவு முழுவதும் தங்களது தோட்டத்தை பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்ஹஞ்ச் என்ற பகுதியை சேர்ந்த சரத் ரவெட் என்பவர் தக்காளி திருட்டை தடுப்பதற்காக அவரது வயலில் 22 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விளைநிலங்களில் சிசிடிவி கேமராக்களை பொறுத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் விளைநிலத்தை சிசிடிவி கேமரா வழியே கண்காணிப்பதாகவும் இதன் காரணமாக திருட்டு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த விவசாயி தெரிவித்தார்.