தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும் – தனியார் பள்ளி நிர்வாகம்!!

0
159
#image_title

தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும் – தனியார் பள்ளி நிர்வாகம்!!

அரசு செய்யாததை எல்லாம் நாம் செய்து கொண்டிருக்கிறோம்..

அரசின் எந்தவித வழிகாட்டலும் இல்லாமல், பயிற்சியும் இல்லாமல், அரசுக்கு ஐந்து பைசா நிதிச் சுமை இல்லாமல், அரசிடமிருந்து தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கட்டி, அங்குள்ளவர்களுக்கு கமிஷன் கொடுத்து, 6 லட்சத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்புத் தந்து, அரசுக்கு சொத்து வரியை, தொழில் வரியை, நிலவரி, நீர் வரி, மின்சார கட்டணம், PF, ESI, சாலை வரி, இருக்கை வரி, இன்சூரன்ஸ், எப்சி, எஜுகேஷன் செஸ், விண்ணப்ப கட்டணம், அங்கீகார கட்டணம், ஆய்வு கட்டணம், சுகாதாரச் சான்று கட்டணம், கட்டிட உரிமைச் சான்று கட்டணம், டிடிசிபி கட்டிட அனுமதி பெற கட்டணம், லஞ்சம்,GST,
TNS டாக்ஸ், சேவை வரி நூலகவரி, பள்ளியின்பெயரில் நிரந்தர வைப்புத் தொகை, இனிமேல் கல்வி கட்டணம் நிர்ணயி ப்பதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் பல்லாயிரக்கணக்கில் லஞ்சம்…. அமைச்சருக்கு லஞ்சம்…..
60 ஆயிரம் பள்ளி வாகனங்களுக்கான சேல்ஸ் டாக்ஸ் சர்வீஸ் டாக்ஸ், டிரைவர் கண்டக்டர்கள் சம்பளம்..
புத்தகம் நோட்டு புத்தகம் யூனிஃபார்ம், டை, பேட்ச்,பெல்ட்,
சூ,சாக்ஸ்.. விற்பனை செய்து வருபவர்களுக்கான வாழ்வுரிமை..

பள்ளி வாகனங்களுக்கான டீசல், பெட்ரோல் உபரி பாகங்களுக்கான வரவு செலவுகள் இவ் வாகனங்களை நம்பி பராமரிக்கும் பல்வகை தொழிலாளர்கள் …. வாழ்வாதாரம்
இதெல்லாம் யார் கணக்கில் சேர்ப்பது….

ஒரு அரசால் செய்ய முடியாததை தனியார் பள்ளி நிர்வாகிகள் எத்தனை இடர்பாடு களையும் தன்னம்பிக்கையோடு வாங்கிய கடனுக்கு வட்டியும்
தவனையும் தவறாமல் செலுத்தி மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள்….
கல்விச்சிறந்த தமிழ் நாடாக மாற்றி வருகிறார்கள்..

எதிர்கால இந்தியாவின் சிற்பிகளை உருவாக்க தமிழகத்தின் தலைசிறந்த கலை கலாச்சாரம் பண்பாடு ஒழுக்கம் கல்வி விளையாட்டு மற்றும் உள்கட்டமைப்பு
வசதிகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை பெருக்கி பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்கி கல்விச்சிறந்த தமிழ்நாடு ஆக மாற்றுவதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தனியார் பள்ளி நிர்வாகங்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் செய்வது ஒன்றே தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் வேலையாக உள்ளது..

பள்ளிக்கல்வித்துறையால் பள்ளி நிர்வாகிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகிய தான் மிச்சம்..

எனவே மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தனியார் பள்ளிகளை சிறுமைப்படுத்தும் நோக்கத்தோடு… தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சில நன்மைகள் செய்வதாக குறிப்பிட்டுள்ளது பள்ளி நிர்வாகிகளுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறோம்.

தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு உதவி செய்யவில்லை என்றாலும்
பரவாயில்லை… உபத்திரம் செய்யாமல் இருந்தாலே நாங்கள் என்றும் எங்கள் கடமையை கல்விப் பணியை
தவறாமல் தவமாக செய்வோம்.

author avatar
Savitha