சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் இவர்தான்! அடித்துக் கூறும்  அமைச்சர்! 

0
58

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர்  வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற சலசலப்பு சில மாதங்களாக அதிமுகவில் இருக்கிறது. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த சர்ச்சை பெரிய பூகம்பமாய் வெடித்ததும் நாமறிந்ததே.

முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஓபிஎஸ்- இபிஎஸ் செயற்குழுவில் வெளிப்படையாக வெளிப்படையான வாக்குவாத மோதலில் ஈடுபட்டனர்.

அரசியல் களத்தில் இந்த சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செப்டம்பர் 29- ல்  மருத்துவ நிபுணருடன்  கொரோனா பொது முடக்கத்தை நீடிப்பது குறித்து முதல்வர் மேற்கொண்ட ஆலோசனையில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லையாம்.

இந்த சர்ச்சை குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது,”அதிமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் போட்டி, பிரச்சினை இல்லை. இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து, முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பார்கள். 

மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தற்போது தீர்க்கப்பட்டு வருகின்றன. எனவே தமிழகத்தில் அடுத்தும் அதிமுக ஆட்சி தான். எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதல்வர்”என்று தெரிவித்துள்ளார். 

இந்தக் கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K