சிவகங்கையில்  மீன்பிடி  திருவிழா!! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

0
225
#image_title

சிவகங்கையில்  மீன்பிடி  திருவிழா!! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புழுதிபட்டியில் வில்லியார் கண்மாய் பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாயில் இருந்து மழை காலத்தில சேகரிக்கப்பட்ட மழை நீர் விவசாய பணிகளுக்காக திறக்கப்பட்டு விவசாய பணிகள் நிறைவடைந்தன.

இந்நிலையில் தண்ணீர் குறையத் தொடங்கியது. ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி மீன் பிடி திருவிழா நடத்த முடிவு செய்து சுற்றுபுற பகுதி கிராமங்களுக்கு அறிவிப்பு செய்தனர் இன்று காலை முதலே 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள கண்மாயில் காத்திருந்தனர்.

ஊர் அம்பலகாரர் மற்றும் முக்கியஸ்தர்கள் வில்லியார் மலையாள கருப்புசாமியை கோவில நோக்கி சாமி கும்பிட்டு நல்ல மழை பொழிய வேண்டும் விவசாயம் செழிக்கவேண்டும் என கூறி சாமி கும்பிட்டு கண்மாய் கரையில் நின்று மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.

வெள்ளை வீசிய உடனே கண்மாயில் காத்திருந்த பொதுமக்கள் மின்னல் வேகத்தில் இறங்கி வலை, ஊத்தா, தூரி,கச்சா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு உற்சாகமுடன் மீன்களை பிடிக்க துவங்கினர்.

இதில் கெண்டை, கட்லா, சிசி, பாப்புலட் போன்ற பெரிய பெரிய மீன்கள் சிக்கின. இதில் வந்திருந்த அனைவருக்கும் ஏராளமான மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

author avatar
Savitha