தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!! மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
100
Today is the last day to apply for the exams!! Important announcement for students!!
Today is the last day to apply for the exams!! Important announcement for students!!

தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!! மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் 10 வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 20 ஆம் தேதி முடிவுற்றது. இந்த தேர்வினை 9,96,089 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். அதே போல் 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி ஆரம்பித்து ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவுற்றது. இந்த இரு வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 19ம் தேதி காலை மற்றும் மதியம் வெளியானது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 91.39 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் 10 மற்றும் 11ம் வகுப்பில் தேர்ச்சியடையாத மாணவர்கள் மே 23ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை துணைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வு எழுதியவர்கள் அரசு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறினால் தட்கல் முறை மூலமாக மே 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தட்கல் முறையில் விண்ணப்பிக்கும் போது  தேர்வு கட்டணத்துடன் 1000 ருபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. பிறகு இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டது. அதாவது மே 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை இன்று மே 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தது.

எனவே 10 மற்றும் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இன்று மாலைக்குள் துனைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் 30 மற்றும் 31ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10 மற்றும் 11ம் வகுப்புக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை நடைபெறுகிறது.

author avatar
CineDesk