தோல் வியாதிகள் சரியாக இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!! பிறகு உங்களுக்கே தெரியும்!!

0
88

தோல் வியாதிகள் சரியாக இதை ஒரு முறை ட்ரை பண்ணுங்க!! பிறகு உங்களுக்கே தெரியும்!!

தோளில் ஏற்படக்கூடிய வியாதிகளான தேமல், படர்தாமரை, தோல் அரிப்பு, தோல் அங்கங்கே சிவந்து போதல், தோல் அழற்சி, காரணமே இல்லாமல் தோளில் திடீரென அரிப்பு ஏற்படுவது, முகத்தில் பருக்கள் ஏற்படுவது, கரும்புள்ளிகள் வருவது என அனைத்திற்கும் ஒரு அருமையான டிப்ஸ் ஒன்றை இங்கு பார்க்க இருக்கிறோம்.

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு அருமையான ஆயுர்வேதிக் மருத்துவ குறிப்பை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை:
இதற்கு முதலில் கார்போக எனப்படும் அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அரிசி நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். இந்த அரிசி ஆனது நம் உடம்பில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கும் சக்தி வாய்ந்தது. மேலும் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜியை நீக்கும் தன்மை இதற்கு உள்ளது. முக்கியமாக சருமத்தில் உள்ள தேமல் படர்தாமரை போன்றவற்றை நீக்கும்.

மேலும் முகத்தில் உள்ள பருக்கள் கரும்புள்ளிகள் தழும்புகள் போன்றவற்றை நீக்கும். இந்த கார்போக அரிசியை சிறிதளவு மிக்சியில் போட்டு பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் குப்பைமேனி இலை பவுடரை சேர்க்க வேண்டும்.

இந்த பவுடர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இல்லையென்றால் குப்பைமேனி இலைகளை பறித்து வந்து நிழல்களில் காயவைத்து பொடியாக்கியும் பயன்படுத்தலாம்.

இப்போது இந்த குப்பைமேனி பவுடரை நாம் அரைத்து வைத்த கார்போக அரிசியின் பவுடருடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இரண்டுமே இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்தால் போதுமானது. இந்த குப்பைமேனிக்கு தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோயையும் தீர்க்கும் சக்தி உள்ளது.

இவ்வாறு இது இரண்டையும் கலந்து தயார் செய்து காற்று புகாத ஒரு டப்பாவில் சேமித்துக் கொள்ளவும். இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பவுடரை எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் பால் இரண்டும் கிடைக்காத பட்சத்தில் ரோஸ் வாட்டரை சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு இதை தயார் செய்து தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். குறிப்பாக இதை தடவுவதற்கு முன்பாக அந்த இடத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவி இருக்க வேண்டும். இவ்வாறு இதை அலர்ஜி இருக்கும் இடத்தில் அப்ளை செய்து இருபதிலிருந்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விடவும் இல்லை என்றால் இரவு முழுவதும் அப்படியே விடவும்.

இவ்வாறு இதை ஒரு நாளில் இரண்டு முறையாவது செய்ய வேண்டும். இதை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வர தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளான தேமல், படர்தாமரை, முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், அதனால் ஏற்பட்ட தழும்புகள், தோல் அரிப்பு, தோல் சிவந்து போதல் என ஏராளமான தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் உடம்பில் ரத்தம் சுத்தம் இல்லாமல் இருந்தால் ஏற்படும். எனவே ரத்தம் சுத்தமாக இருக்க வாரத்தில் இரண்டு முறையாவது பீட்ரூட்டை சாப்பிட வேண்டும். பீட்ரூட்டை ஜூஸ் ஆகவோ அல்லது சமையல் செய்தோ சாப்பிட்டு வரலாம். இவ்வாறு செய்வதால் ரத்தம் சுத்திகரிப்பு நன்றாக நடந்து தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராமல் தடுக்கும்.

author avatar
CineDesk