வெயில் காலத்தில் வரும் நா வறட்சி வாய் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் குணமாக! இந்த ஒரே ஒரு பொருள் போதும்!  

0
152
#image_title

வெயில் காலத்தில் வரும் நா வறட்சி வாய் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் குணமாக! இந்த ஒரே ஒரு பொருள் போதும்!  

வெயில் காலத்தில் நம் எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் இருக்கக்கூடிய ஒரு பொருள்தான் அதிமதுரம். இது இனிப்பு சுவை கொண்டது.

வெயில் காலங்களில் பொதுவாக வயிற்றில், வாயில் புண்கள் ஏற்படும். அதிகமாக நா வறட்சி உண்டாகும். அதற்கு சரியான மருந்து இந்த அதிமதுரம்.

இது பொடியாகவோ அல்லது வேராகவோ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வீட்டு வைத்திய முறையில் மூலமும் நமது உடலை ஆரோக்கியமாக ஆயுள் வரை வைத்திருக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் நமது முன்னோர்கள்.

நா வறட்சி உள்ளவர்கள் இந்த அதிமதுரத்தை எடுத்து தண்ணீரில் அலசி விட்டு வாயில் வைத்திருந்தாலே போதும். இதில் உள்ள இனிப்பு சுவை தொண்டை வரை நன்றாக இறங்கும். உமிழ்நீரும் அதிகமாக சுரக்கும்.

சாப்பிட்டதற்கு அப்புறமோ அல்லது கொஞ்சமாக காரம் சார்ந்த உணவை எடுத்துக் கொண்டாலோ சிலருக்கு வயிற்று வலி ஏற்படும். இது அல்சருக்கான அறிகுறி.

** வயிறு மற்றும் வாயில் புண் உள்ளவர்கள் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் அளவு அதிமதுர பொடியை கலந்து முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும்.

பின்னர் அடுத்த நாள் காலை இதை வடிகட்டி 15 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வர உங்களது வயிற்றில் வாயில் உள்ள புண்கள் முற்றிலும் ஆறிவிடும். எந்தவித பக்க விளைவுகளும் இல்லாத அருமையான இயற்கை வைத்தியம் இது.