கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!

0
69
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் அன்யூனியம் அதிகரிக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமான பாதையில் பயணிக்கும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதுமனை புது வீடு வாங்குவதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தோஷம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அதிக முன்னேற்றம் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு கண்டிப்பாக சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani