நீட் தேர்வால் தமிழகத்தில் 21 உயிர்களை பலி கொடுத்துள்ளோம் -உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

0
32

நீட் தேர்வால் தமிழகத்தில் 21 உயிர்களை பலி கொடுத்துள்ளோம் -உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை கண்டிக்கும் விதமாக நேற்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.இதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தை விளையாட்டுத் துறை அமைச்சரும் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
போராட்டத்தின் போது அவர் பேசியதாவது,நீட் தேர்வால் தமிழகத்தில் 21 உயிர்கள் காவு வாங்க பட்டுள்ளது.நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வை எழுதிய குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன்(19) என்ற மாணவர் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த மாணவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள வில்லை.இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.இந்த கொலைக்கு முழுக்க முழுக்க மத்திய அரசும்,தமிழக ஆளுநரும் தான் காரணம்.

மேலும் அதிமுகவிற்கு நான் ஒரு சவால் விடுகின்றேன்.நாட்டை ஆளும் ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று மாநாட்டில் ஒரு தீர்மானத்தை கொண்டு வர முடியுமா? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.நீட் தேர்விற்கு எதிராக டெல்லியில் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.நீங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என்றாலும் பரவாயில்லை.உங்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் மற்றும் மாணவர் அணி செயலாளரை மட்டும் அனுப்பி வையுங்கள்.போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தால் முழு பெருமையையும் அதிமுகவே எடுத்து கொள்ளட்டும் என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென்ற மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்து போட மாட்டேன் என்று அடம் பிடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நான் கவர்னரிடம் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.நீங்கள் யார்? முதலமைச்சர் சொல்வதை மத்திய அரசிடம் தெரிவிப்பது மட்டும் தான் உங்களுடைய வேலையே தவிர மற்ற எந்த ஒரு அதிகாரமும் உங்களுக்கு கிடையாது.

மேலும் நீட் தேர்வை ஒழித்தால் தான் தமிழக்தில் விடியல் பிறக்கும்.நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு தேவையற்ற ஒன்று.உயிர்களை பலி வாங்கும் நீட் தேர்விற்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த போராட்டம் வெறும் சாம்பில் மட்டும் தான்.விரைவில் தலைநகர் டெல்லியில் திமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று மதுரையை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் நீட் தேர்விற்கு எதிராக திமுகவின் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.