சித்த மருத்துவத்திற்கு ஆளுநர் விரோதியாக இருக்க மாட்டார் என நம்புகிறோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

0
128
#image_title

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மாவட்ட இணை இயக்குனர், மற்றும் 19 மாவட்டபொதுப்பணித்துறை செயற்பொறியாளர்களுடனான ஆய்வு கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய‌ அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தமிழகத்தில் ஹஜ் யாத்திரை செல்பவர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, மத்திய அரசிடமிருந்து 6300 டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டு உள்ளது. ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மே 15 முதல் 25 வரை 19 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மருத்துவத்துறை கட்டமைப்பை மேம்படுத்த 1136 கோடி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டி பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிறைவேற்ற கூறி தமிழக அரசு ஏழு முறை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

ஆளுநர் கேட்ட விளக்கத்தை அளித்துள்ளோம். தமிழ்நாட்டில் பெருவாரியான மக்களின் விருப்பமான சித்த மருத்துவ பல்கலைக்கழக ஆளுநர் ஒப்புதல் தருவார் என கருதுகிறோம். யூ.ஜி.சியில் பல்கலைக் கழகத்தில் வேந்தராக ஆளுநர் தான் இருக்க வேண்டும் என்று எந்த குறிப்பும் இல்லை. இதுவரை சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை மறுத்தோ அல்லது வேண்டாம் என்று ஆளுநரிடம் இருந்து பதில் வரவில்லை.

சித்த மருத்துவத்திற்கு ஆளுநர் விரோதியாக இருக்க மாட்டார் என நம்புகிறோம். சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிறைவேற்ற தமிழக அரசு சட்டபோராட்டம் நடத்தி வருகிறோம் என அமைச்சர் தெரிவித்தார்.

குஜராத்தில் 2012 ஆண்டு தற்போதைய பிரதமர் குஜராத்தின் முதல்வராக இருந்த போது மாநில முதல்வர்கள் பல்கலைக்கழக வேந்தர் ஆகலாம் என ஆளுநருக்கு மசோதா நிறைவேற்ற அனுப்பி இருக்கிறார்.

இந்நிலையில் பல்கலைக்கழக மானிய குழுவின் நெறிமுறைகளை மீறியதாக இல்லை. அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. பூஞ்ச் கமிஷன் சார்பில் 2010 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் ஆளுநருக்கு உள்ள வேலை பளுவில் பல்கலைக்கழகங்களை
நிர்வகிப்பது முறையாக இருக்காது மேலும் பணி சுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

மீண்டும் ஆளுநருக்கு மேற்குறிப்பிட்ட தகவல்களோடு சட்டத்துறையின் மூலம் கடிதம் அனுப்பப்படும். தமிழ்நாட்டில் உள்ள இசை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு முதல்வர் தான் வேந்தராக இருககிறார்.அந்த மசோதாவிற்கு அப்போது இருந்த ஆளுநர் ரோசையா ஒப்புதல் அளித்திருந்தார் என்றார்.

ஆளுநருக்கு உள்ள வேலைப் பளுவில் பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பது பொருத்தமானதாக இருக்காது- வேலைப்பளுவாக இருக்கும் என மத்திய மாநில உறவுகளை ஆராயும் அமைப்பே கூறியுள்ளது என்றார்.

author avatar
Savitha