சேலத்தின் 47 தீவுகள் ஏரி சரணாலயமாக மாறுமா? இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை!! 

0
32
Will Salem's 47 Islands become a lake sanctuary? Nature lovers demand!!
Will Salem's 47 Islands become a lake sanctuary? Nature lovers demand!!

சேலத்தின் 47 தீவுகள் ஏரி சரணாலயமாக மாறுமா? இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை!!

சேலம் மாவட்டம் மூக்கனேரி 58 ஏக்கர் பரப்பில் அமைந்த நீர்த்தேக்கமாக உள்ளது. இது சேலம் நகரத்திற்கு நீர் வழங்க முக்கிய ஏரியாகும். சேர்வராயன் மலை அடிவாரத்தில் ஏற்காடு மலையில் அமைந்துள்ளது.  மேலும் ஏற்காடு மலையில் இருந்து வரும் மழை நீர் இந்த ஏரியில் தேக்கிவைக்க படுகிறது.

மேலும் இந்த ஏரியில்  மனிதனால் உருவாக்கப்பட்ட 47 தீவுகள் உள்ளன. பெருபாலும் மக்கள் சேலத்தில் ஏற்காடு பகுதிக்கு சுற்றுலா செல்வர்கள். ஆனால் தற்போது இயற்கை அழகவோடு காட்சியளிக்கும் மூக்கனேரிக்கு மக்கள் படை எடுத்துள்ளார்கள். இந்த எரி மலைகளால் சூழப்பட்ட  இயற்கையோடு இணைந்து காணப்படுகிறது.

இந்த ஏரி சேலம் மாநராட்சிக்கு தண்ணீர் வழங்குவதில் பிரதான பங்கு வகிக்கிறது. இதில் அமைந்திருக்கும் சிறியசிறிய தீவுகள், ஏரியை துர்வாரும் போது அகற்றிய களிமண்ணை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் சுமார் 12,000 திற்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளது.

இதில் இயற்கை அழகு நிறைந்த  மூக்கனேரயில் உள்ளதால் கொக்கு, பூநாரை, ஊசிவால் வாத்து, நீலச்சிறாகி, வாலாட்டி குருவி, மஞ்சள் குருவி, மஞ்சள் மூக்கு நாரை போன்ற பறவைகள் இந்த ஏரியில் உள்ளது. மேலும் 150 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் புகலிடமாக இந்த எரி உள்ளது.

இந்த ஏரியில் மீன்களும் அதிகளவில் உள்ளது. இந்த ஏரியின் அருகில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரியில் இருக்கும் தீவுகளை பார்வையிட பரிசல் வசதிகளும் இருக்கிறது. மேலும் பல்வேறு உயினங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த ஏரி சரணாலயமாக மாற்ற வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

author avatar
Jeevitha