இனி SIM ஈசியா வாங்க முடியாது? இப்படித்தான் வாங்க முடியும்!

0
224
#image_title

நமக்கு SIM வேண்டும் என்றால் அங்கங்க கடைகளில் வெளியே விற்று கொண்டு இருப்பார்கள். நாமும் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வோம் ஆனால் இனிமேல் அப்படி இருக்காது என்று டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட தொலைத்தொடர்பு மசோதா 2023 இன் புதிய பதிப்பில் இந்த விதிமுறை அடங்கி இருக்கிறது. இனி நுகர்வோருக்கு சிம் கார்டுகளை வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களால் பயோமெட்ரிக் அடையாளம் காட்டப்பட வேண்டும் அதாவது கைரேகை முக்கியம் என தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது கட்டாயமாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

 

மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் அத்தகைய தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமும், பரிந்துரைக்கப்பட்டபடி சரிபார்க்கக்கூடிய கைரேகை அடிப்படையிலான அடையாளத்தைப் பயன்படுத்தி தான் சிம் கார்டுகளை மக்களுக்கு விற்க வேண்டும். அதை யாருக்கு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குகிறதோ அந்த நபரை அடையாளம் காண வேண்டும். இந்த நபர்களின் அடையாளம் மற்றும் செய்திகள் தரவுகள் ஆக்கப்பட வேண்டும். ” என்று முன்மொழியப்பட்ட சட்டம் கூறுகிறது.

 

தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்த மசோதாவில், இ-காமர்ஸ், ஆன்லைன் செய்தி அனுப்புதல், பணம் செலுத்துதல் போன்ற (OTT) சேவைகள் இவை அனைத்திற்கும் இது ஒரு தீர்வாக இருக்கும். இப்பொழுது மொபைல் நம்பர்களுக்கு வரும் ஓடிபி மூலம் பணம் திருடுதல் ஏற்படுகின்றது. அதனால் இந்த சட்டம் முன்மொழியப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

 

தொலைத்தொடர்பு மசோதா, 2023, தொலைத்தொடர்புத் துறையை நிர்வகிக்கும் 138 ஆண்டுகள் பழமையான இந்தியத் தந்திச் சட்டத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் ஆகஸ்டில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

ஒரு நிறுவனம் தனது அனுமதியை ஒப்படைத்தால் உரிமம், பதிவு போன்றவற்றிற்கான கட்டணங்களைத் திரும்பப் பெறுதல் போன்ற சில விதிகளை எளிதாக்கவும் மசோதா முன்மொழியப்பட்டது. பொருட்கள், சேவைகளுக்கான விளம்பரம் மற்றும் விளம்பரச் செய்திகளை அனுப்புவதற்கும், நிதி முதலீடுகளைக் கோருவதற்கும் நுகர்வோரின் முன் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் அது கட்டாயப்படுத்தியுள்ளது.

 

தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், தொலைத்தொடர்பு சேவை தொடர்பான எந்தவொரு குறையையும் பயனர்கள் பதிவு செய்வதற்கும், அத்தகைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் ஒரு ஆன்லைன் பொறிமுறையை நிறுவ வேண்டும் என்று மசோதாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

author avatar
Kowsalya