மழை அலர்ட்: அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
261
#image_title

மழை அலர்ட்: அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பேய் மழை பெய்து வருகிறது.

கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு மழையின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதி தீவிர கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதனால் பல கிராமங்கள் தனி தீவு போல் காட்சி அளித்து பார்க்க கதிகலங்க வைக்கும் நிகழ்வாக இருக்கிறது.

தொடர் மழை காரணமாக இந்த மாவட்டங்களின் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த கனமழை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அடுத்த சில மணி நேரத்தில் இந்த கனமழை 13 மாவட்டங்களுக்களை வெளுக்க போகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து இருக்கிறது.

மேலும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசி வருவதால் இன்று மற்றும் நாளை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.