மழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் தென் மாவட்டங்களை பார்வையிடும் எடப்பாடியார்..!!

0
178
#image_title

மழை வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் தென் மாவட்டங்களை பார்வையிடும் எடப்பாடியார்..!!

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தென் தமிழகத்தில் தொடர்ந்து வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

இந்த பேய் மழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. நீர், நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில் அங்கு இருக்கும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து இருக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி தவித்து வருகின்றனர்.

விடாமல் மழை பெய்து வருவதால் இந்த 4 மாவட்டங்களில் திரும்பிய இடமெல்லாம் தண்ணீராய் காட்சி தருகிறது. இந்த மழை வெள்ளத்தால் பேருந்து, ரயில், சேவை முற்றிலும் முடங்கி இருக்கிறது.

குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ள நீரால் மக்கள் தங்களின் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த 3 தினங்களாக உண்ண உணவின்றி, மின்னசர வசதி இன்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு முடிந்த உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கடந்த சில தினங்களாக நிவாரண பொருட்கள், உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களை அதிமுக பொதுச் செயலாளர் இன்று நேரடியாக பார்வையிட்டு மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க இருக்கிறார்.

போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய முதல்வர் ஸ்டலின் அவர்கள் டெல்லியில் நடைபெறவிருக்கும் இந்தியா கூட்டணியின் மூன்றாவது மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தென் மாவட்டங்களை பார்வையிடுவது மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.