உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் கன மழை!!

0
37
#image_title

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் கன மழை!!

வருடத்தின் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பொழியும் மாதமாக உள்ளது. அதன்படி கடந்த மாதம் அக்டோபர் இறுதியில் இருந்து தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

இருந்தபோதும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாததால் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாகவே உள்ளது.

ஆண்டுதோறும் வெளுத்து வாங்கி வரும் பருவமழையானது இந்த ஆண்டில் பெரிதாக பொழிய வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒருசில இடங்களில் மட்டுமே இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

கடந்த கோடை காலத்தில் வற்றிய நீர் நிலைகள் குறைவான மழைப் பொழிவால் நிரம்பாமல் இருக்கிறது. இதனால் போதிய நீர் இல்லாமல் விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சியால் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழைக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

ஒருவேளை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தால் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்பு இருக்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தால் தமிழகத்தில் கோவை, தேனி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து இருக்கின்றது.