சமயங்களில் ஏ ஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. சமீபத்தில் அமெரிக்காவில் STARGATE AI அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு சீனாவில் DEEPSEEK AI விலை மலிவாகவும், துல்லியமாக செயல்படும் வகையிலும் அறிமுகம் செய்திருந்தது. பல்வேறு நாடுகளும் தங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தொடர்ந்து அறிமுகம் செய்தும், உபயோகித்தும் வருகின்றனர். இந்நிலையில் இதன் அபாயம் காரணமாக பல்வேறு நாடுகளும் OPEN AI செயலிகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டுத் தகவல்கள் வெளியேற வாய்ப்பு உள்ளது என்ற அச்சத்தின் காரணமாக தடையை கட்டாயப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், இந்தியாவும் மத்திய அரசு பணியாளர்களுக்கு OPEN AI யின் CHATGPT, DEEPSEEK செயலிகளை தடை விதித்துள்ளது. இதன் மூலம் நம் நாட்டின் முக்கிய தரவுகள் திருடப்பட அபாயம் உள்ளது என்பதனால் இதனை முற்றிலும் அலுவலக கணினிகளில் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், கூடிய விரைவில் இந்தியாவிலும் சொந்தமாக AI என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளார்.