வயிறு உப்பசம்? அப்போ இந்த மூலிகை தேநீர் செய்து பருகுங்கள்!!

0
27
#image_title

வயிறு உப்பசம்? அப்போ இந்த மூலிகை தேநீர் செய்து பருகுங்கள்!!

நம்மில் பலர் ஆரோக்கியமற்ற உணவுகளில் வயிறு உப்பச பாதிப்பை சந்தித்து வருகிறோம். இந்த பாதிப்பை சரி செய்ய கொத்தமல்லி விதையுடன் 3 பொருட்களை சேர்த்து தேநீர் செய்து பருகுங்கள். வயிறு உப்பசம் மட்டும் அல்ல உடல் பருமன், கை கால் வீக்கம், முகப்பரு, குடல் தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் சரியாகும். மருந்து மாத்திரை இன்றி இயற்கை வழியில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது சிறந்தது.

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி விதை – 2 தேக்கரண்டி

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 2 அல்லது 3

*கறிவேப்பிலை – 6 இலைகள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் கொத்தமல்லி விதையை போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் வறுத்து வைத்துள்ள கொத்தமல்லி அதனுடன் 1/4 தேக்கரண்டி சீரகம், 2 கரு மிளகு மற்றும் 6 கருவேப்பிலை இலைகள் ஆகியவற்றை போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துள்ள பவுடரை கலந்து நன்கு கொதிக்க வைக்கவும்.

1 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1 கிளாஸ் என்று வரு வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பிறகு அதை ஒரு டம்ளருக்கு மாற்றி தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் தூய தேன் அல்லது 1 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கி பருகவும்.

இந்த மூலிகை தேநீரை தினமும் பருகி வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். வயிறு தொடர்பான பாதிப்புக்கு இந்த மூலிகை தேநீர் சிறந்த தீர்வாக இருக்கும்.