வெயில் காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்!! இல்லையேல் உங்களுக்கு தான் பிரச்சனை!!

0
99
#image_title

வெயில் காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்!! இல்லையேல் உங்களுக்கு தான் பிரச்சனை!!

கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.உடல் உஷ்ணம்,அம்மை,தோல் தொடர்பான பிரச்சனைகள்,வியர்வை நாற்றம் ஆகியவை அதிகளவில் ஏற்படும்.

வெயில் காலத்தில் நமது உடலில் நீர்ச்சத்து குறையும்.இதனால் மயக்கம்,வாந்தி,தலைவலி,உடல் மந்த நிலை ஏற்படும்.எனவே நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்,காய்கறிகளை சாப்பிடுவது நல்லது.

காலையில் எழுந்த உடன் 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் மட்டுமே உடல் சூட்டில் இருந்து தப்பிக்க முடியும்.

இளநீர்,நுங்கு,வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.அதேபோல் சில உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உடல் உஷ்ணம் ஆவதை தடுக்க முடியும்.

பட்டை,மிளகு,மிளகாய்,இஞ்சி,பூண்டு போன்ற பொருட்களை கோடை காலத்தில் அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும்.இந்த பொருட்களால் கோடை காலத்தில் உடலில் சில பிரச்சனைகளை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கோழி இறைச்சி,எண்ணையில் வறுத்த,பொரித்த உணவுகள்,சூடான உணவுகள் சாப்பிடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.