பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது – வானதி சீனிவாசன்!

0
135
#image_title

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது – வானதி சீனிவாசன்!

இந்தியா முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்க்கும் தமிழக மக்களிடம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தமிழகத்தில் நிலவுகின்ற திராவிட கட்சிகளின் ஆளுமையில் இருந்து மக்களை மீட்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார்.

அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகிறார்.

இன்று கன்னியாகுமரியில் நடைபெறுகின்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகிறார், மேலும் இந்த மாத இறுதியில் மீண்டும் இரண்டு நாள் பயணமாக சேலம் கோவை உள்ளிட்டபகுதிகளுக்கும் வரயிருக்கிறார்.

இது குறித்து பாஜக மாநில மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் கூறியதாவது, பிரதமரின் தமிழக வருகையானது தமிழக அரசியல் களத்தில் வேகமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது, பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் வாக்கு வங்கி தொடர்ந்து அதிகரித்து கொண்ட வருகிறது.

மேலும் தமிழகத்தில் ஒரே சமயத்தில் பதினொறு மருத்துவ கல்லூரிகள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து செயல்ப்படுத்தி வருகிறது.

ஆனால் மாநிலத்தை ஆளும் திமுகவோ பிரதமருக்கு எதிரான அலைகளை தமிழகத்தில் ஏற்படுத்த தொடர்ந்து முயற்ச்சித்து வருகிறத என பேசியுள்ளார்.

author avatar
Savitha