உடம்பின் மிக முக்கிய பாகமான மூளை தினம் இன்று ஜூலை 22!! நோய்களிலிருந்து பாதுகாப்போம்!!

0
36

உடம்பின் மிக முக்கிய பாகமான மூளை தினம் இன்று ஜூலை 22!! நோய்களிலிருந்து பாதுகாப்போம்!! 

இன்று ஜூலை 22 உலக மூளை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மனித உடலின் பிரதானம் தலை. அந்த தலைக்கு பிரதானமாக இருப்பது மூளை தான். சிறியதாக இருக்கும் அந்த மூளையின் செயல்பாடு அளப்பரியது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு அறிந்து நம்மை விழிப்புணர்வோடு பாதுகாத்துக் கொள்ள ஜூலை 22 ஆம் நாள் உலகம் மூளை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க மற்றும் மூளை நரம்பு தொடர்பான ஆராய்ச்சிகள் ஆய்வுகள் நடக்க இந்த நாள் உதவுகிறது.

மூளையை பாதுகாப்பது என்பது ஒரு சவாலான விஷயமாகும். இதில் 3 படிநிலைகள் உள்ளன.

1. முதலாவது நோய் வராமல் தற்காத்துக் கொள்வது.

மூளையில் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு சரியான உணவுப் பழக்கம், சரியான வாழ்க்கை முறை, போதுமான தூக்கம், போதுமான உடல் உழைப்பு, மூளை உழைப்பு, போன்றவை நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க உதவும். மேலும் நேர்மையான எண்ணங்களுடன், சுறுசுறுப்பான மனநிலையையும், மூளையின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைப்பது அவசியம். மேலும் வயதானவர்கள் அடிக்கடி மூளைக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் ஞாபகம் வருதே போன்ற பிரச்சனைகளை தடுக்க முடியும். மேலும் மரபு ரீதியான உடல் குறைபாடு உள்ளவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

2. சரியான சிகிச்சை முறை;

மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் நோய்களின் ஆரம்பத்தில் ஏற்படும் அறிகுறிகளை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால் பல பெரிய பாதிப்புகளை முழுமையாக தடுக்கலாம்.  ஸ்ட்ரோக் என்ற ஆபத்தான பிரச்சனை காரணமாக மூளைக்கான ரத்த ஓட்டம் தடைபடுவதால் மூளை செல்கள் அழிந்துவிடும். இந்த பிரச்சனையில் நேரம் என்பது மிகவும் முக்கியம். இதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

மற்ற மூளை நோய்களான பார்க்கின்சன்ஸ், வலிப்பு போன்ற நோய்களுக்கு தகுந்த மருத்துவர்களிடம் சரியான மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வது முக்கியமானதாகும்.

3. புணரமைப்பு:

மூளை மற்றும் நரம்பு செல்கள் வயதாக தேய்மானத்திற்கு உட்படும். இதனால் மூளை செல்கள் அழியும் பொழுது பல அறிகுறிகள் தென்படும். இதனை சரியான சிகிச்சை மற்றும் வாழ்க்கை தரத்தனை மேம்படுத்துவதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். வலிப்பு மறதி உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் மற்றவர்களின் உதவியை நாடுவதும், சமுதாயத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கான உதவிகளை அன்போடு செய்வதும் அவசியமாகிறது.

அதேபோல் ஆட்டிசம், டிஸ்லெக்சியா என்ற கற்றல் குறைபாடு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்  சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழாமல், தேவையான உதவிகளை பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.