#BREAKING: அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!! அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

0
52
#image_title

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!! அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மிக்ஜாம் புயல் கரையை கடந்தும் அதன் வீரியம் மட்டும் இன்னும் குறையவே இல்லை. கடந்த நவம்பர் 26 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த புயலால் தமிழகத்தில் வட மாவட்டங்களை பலத்த அடி வாங்கி இருக்கிறது. தொடர் கனமழையால் மக்கள் வசிக்கும் இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர ஆகிய மாவட்டங்களை சூறையாடிவிட்டு ஓய்ந்திருக்கும் நிலையில் அதன் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு இருக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

புயல்மழை ஓய்ந்த நிலையில் தற்பொழுது கனமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, திருவள்ளுர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.