இந்த ஒரு புயலுக்கே திமுக அரசு சாஞ்சிடுச்சு.. எங்கள் ஆட்சியில் நாங்க சந்திக்காத புயலா? லிஸ்ட் போட்ட எடப்பாடியார்..!!

0
76
#image_title

இந்த ஒரு புயலுக்கே திமுக அரசு சாஞ்சிடுச்சு.. எங்கள் ஆட்சியில் நாங்க சந்திக்காத புயலா? லிஸ்ட் போட்ட எடப்பாடியார்..!!

கடந்த 26 ஆம் தேதி வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் அதன் தீவிரம் அதிகரித்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களை புரட்டி எடுத்து விட்டு சென்று விட்டது.

ஒரு நாள் கனமழைக்கே தலைநகர் சென்னை மழைநீரில் மூழ்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. தொடர் கனமழையால் சென்னை மக்களின் வாழ்க்கை ஒரு இரவில் தலைகீழாக மாறிவிட்டது. குடிக்க நீர், உண்ண உணவு இன்றி பெரும் அவதி அடைந்து வரும் மக்களை பார்க்கும் பொழுது வேதனை தான் ஏற்படுகிறது. இந்த புயல் மழைக்கு நாம் சில உயிரிகளை காவு கொடுத்து விட்டோம். சென்னையின் நிலை இவ்வாறு மோசமாகக் காரணம் ஆளும் திமுக அரசு இந்த புயல் மழையை கையாண்ட விதம் தான்.

திமுக அரசின் மெத்தன போக்கால் தற்பொழுது சென்னை மக்களின் அழுகுரல் மட்டுமே காதில் ஒலித்து வருகிறது. தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் குடிநீர், உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருவது பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கிறது. மக்களை காக்க தவறிய திமுக அரசு மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழத் தொடங்கி இருக்கிறது.

இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மழை வெள்ளம் பாதித்த சென்னையின் பெருங்குடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு தேவையான நிவாரண உதவியை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், தங்கள் ஆட்சியில் கஜா, நிபர், புரேவி புயலை பார்த்தோம். இந்த புயல் பாதிப்பு ஏற்பட்ட போது துரிதமான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்தோம். இதனால் மக்களிடையே நன்மதிப்பை பெற்ற அரசு அதிமுக அரசு என்பதில் பெருமைக் கொள்கிறேன்.

ஆனால் பதவி வகித்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் வந்திருக்கும் இந்த முதல் புயலை கூட கையாள தெரியாத அரசு தான் விடியா திமுக அரசு. மிக்ஜாம் புயலால் பெரியளவில் காற்று வீசவில்லை, மரங்கள் முறிந்து சாயவில்லை, மின்கம்பங்கள் சாயவில்லை. மழை மட்டும் தான் பெய்திருக்கிறது. இந்த மழை பாதிப்பை கூட கையாளத் தெரியாமல் திமுக அரசு தவித்து வருவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தான் மெத்தனம் என்று பார்த்தால் மீட்பு பணிகளிலும் மெத்தன போக்கை தான் காட்டி வருகிறது இந்த விடியா திமுக அரசு. இனியாவது பொறுப்புடன் செயல்பட்டு மீட்பு பணிகளை விரைவில் முடித்து மக்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை செய்து தர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துவதாக செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.