ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா? இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் வழக்கு!

ஜல்லிக்கட்டு கம்பாலா போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தும் பீட்டா மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் கே எம் ஜோசப், அஜய் ரஸ்ஜ்தோகி போன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமைப்பில் கடந்த 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்து … Read more

ட்ரெயின் பயணிகள் கவனத்திற்கு!! இந்த ஊருக்கு இடையே செல்லும் ரயில்கள் இயங்காது!!

ட்ரெயின் பயணிகள் கவனத்திற்கு!! இந்த ஊருக்கு இடையே செல்லும் ரயில்கள் இயங்காது!! தற்பொழுது பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு இடையான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு இரவு 11.55 மணிக்கு கிளம்பி காலையில் 6.10 மணிக்கு சென்றடையும். தற்பொழுது பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் நவம்பர் 30 முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை இந்த ரயில் சேவை முழுவதும் … Read more

அந்த விசாரணை எப்ப தான்ப்பா முடியும்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

சின்னசேலம் அருகே உள்ள கணியாமூரில் இருக்கின்ற சக்தி மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் படித்த கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாணவி ஸ்ரீமதி மரணமடைந்ததை தொடர்ந்து பள்ளி வளாகத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அந்த பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பேருந்துகள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தி தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த கலவரத்தை அடுத்து அந்தப் பள்ளி மூடப்பட்டது. இந்த சம்பவம் நடப்பாண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. தற்சமயம் இந்த பள்ளி வளாகம் சீர் செய்யப்பட்டு விட்டது. அரசு … Read more

இனி கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று பரிசோதனை அவசியமில்லை! ஆனால் அவர்களுக்கு நிச்சயமாக பரிசோதனை செய்யப்பட வேண்டும்!

பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கும் அருவை சிகிச்சை செய்வதற்கும் நோய் தொற்று பரிசோதனை இனிவரும் காலங்களில் கட்டாயம் இல்லை என்று தமிழக பொது சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நல பணிகள் இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நோய் தொற்று பரிசோதனைகள் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில், காய்ச்சல், இருமல், தொண்டை வலி, … Read more

அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை! தமிழ்நாடு முழுவதும் 5000 பகுதிகளில் தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கும் பாஜக!

தமிழ்நாடு முழுவதும் 1200 பகுதிகளில் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதிலும் அடுத்த கட்டமாக தமிழக அரசுக்கு எதிராக 5000 பகுதிகளில் போராட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம் என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். அரசியல் சாசன தினத்தை ஒட்டி அந்த நாளை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் விதத்தில் 12 இருசக்கர வாகன பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணம் செய்து தமிழகத்திற்கு திரும்பி வந்ததை கொண்டாடும் விதத்தில் சென்னை எழும்பூரில் இருக்கின்ற … Read more

புதுக்கோட்டை அருகே அழகிய நிலையில் கிடந்த இளம் பெண் சடலம்! தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் இருக்கின்ற பல்லவராயன் பத்தை கிராமத்தை சார்ந்தவர் திருச்செல்வம் இவருடைய மனைவி பழனியம்மாள் பழனியம்மாள் கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதன் பிறகு காணாமல் போனார் என்று சொல்லப்படுகிறது. உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் பழனியம்மாள் கிடைக்கவில்லை. ஆகவே இது தொடர்பாக காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பதிவு செய்து காணாமல் போன பழனியம்மாளை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தான் … Read more

மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டீர்களா? இன்று முதல் நடைபெறுகிறது சிறப்பு முகாம்!

மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழகத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உண்டாகும் சிரமத்தை கருத்தில் கொண்டு இன்று முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையில் மின் கட்டண அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. … Read more

வருங்கால தமிழகமே என அன்புமணியை பாராட்டிய அமைச்சர் பொன்முடி! 

K. Ponmudy

வருங்கால தமிழகமே என அன்புமணியை பாராட்டிய அமைச்சர் பொன்முடி!   திமுகவின் இளைஞர் அணி தலைவரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்   அந்த வகையில் விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம், அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை புகழேந்தி எம்.எல்.ஏ. தாங்கி நடத்தினார். மாவட்ட இளைஞர் அணி … Read more

டிசம்பர் மாத தொடக்கத்தில் டெல்லி செல்கிறார் முதல்வர்! எதற்காக தெரியுமா?

டிசம்பர் மாதம் 4ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணமாகிறார். அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜி-20 மாநாடு முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசிப்பதற்காக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது. பிறந்தநாள் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் மாதம் 4ம் தேதி டெல்லிக்கு செல்கிறார். பிரதமரை சந்தித்து தமிழக நலன் தொடர்பான கோரிக்கைகளுடன் கூடிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு தனிப்பட்ட … Read more

ஆளுநரிடம் அரசியல் தொடர்பாக பேசவில்லை! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது அதிமுகவின் உள்விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் தலையிடவில்லை. பாஜகவின் கொள்கை வேறு, அதிமுகவின் கொள்கை வேறு. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைய வேண்டும் என்று பிரதமரோ அல்லது அமித்ஷாவோ பேசியதில்லை. இனிவரும் காலங்களிலும் அப்படி எதுவும் நடக்காது. பாஜக தேசிய கட்சி, தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் எங்களுடைய அணுகுமுறை இருக்கும் என்று தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பு … Read more