திருப்பத்தூர் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரிந்த 2 காட்டு யானைகள்!! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை!!

திருப்பத்தூர் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரிந்த 2 காட்டு யானைகள்!! மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை!! திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரிந்து வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த 2 காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி 8 மணி நேரம் போராடி வாகனத்தில் ஏற்றிய வனதுறையினர். திருப்பத்தூர் மாவட்டம் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான நாட்றம்பள்ளி அடுத்த தகரகுப்பம் மலைப்பகுதியில் கடந்த 13 ஆம் தேதி முகமிட்டிருந்த இரண்டு … Read more

அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறதா? நாகையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!!

அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறதா? நாகையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!! நாகை மாவட்டத்தில் உள்ள 500 விசைப்படகுகள் ஆய்வு. தடைசெய்யப்பட்ட சுருக்குவலை, அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறதா? என மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். மீன்பிடி தடை காலங்களில் தமிழக மீனவர்கள் அவர்களது விசைப்படகுகளை பழுது நீக்குவது புதிய இன்ஜின்கள் பொருத்துவது வழக்கம். அவ்வாறு பொருத்தும் எஞ்சின்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு உள்ளதா? என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு … Read more

மதுரையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கர ஆயுதத்துடன் கும்மாளமிடும் இளைஞர்கள்!!

மதுரையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பயங்கர ஆயுதத்துடன் கும்மாளமிடும் இளைஞர்கள்!! சமூக வலைதளங்களில் பரவும் காட்சி!! மதுரை செல்லூர் 50 அடி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த முத்து மணி என்பவர் தனது பிறந்த நாளை நண்பர்கள் புடை சூழ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். குறிப்பாக பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது முத்துமணியின் நண்பர்கள் சிலர் அவருக்கு 3 அடி வாளை முத்து மணிக்கு பரிசாக … Read more

காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்து!!

காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்து . வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் 10 பேர் காயம். சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் மிடாஸ் தனியார் மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையில் பணிபுரிய காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிற்சாலையில் பேருந்து மூலம் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். அதன்படி காஞ்சிபுரம் அடுத்த மாகரல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இன்று காலை வேளை பணிக்கு 26 தொழிலாளர்கள் … Read more

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 கலெக்டர்கள் இடமாற்றம்! அதிருப்தியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நான்கு ஆட்சியர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கடல் சார்ந்த தொழில்களை மட்டுமே நம்பி அந்த மாவட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவும் இந்த மாவட்டத்தில் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 4 ஆட்சியர்கள் … Read more

ரீல்ஸ் பார்த்ததற்கு கண்டித்தேன் அதனால் தான் எனது மகள் கோபித்துக் கொண்டு சென்றார் – கோவையில் இருந்து காணாமல் போன சிறுமியின் தாயார் பேட்டி!  

ரீல்ஸ் பார்த்ததற்கு கண்டித்தேன் அதனால் தான் எனது மகள் கோபித்துக் கொண்டு சென்றார் – கோவையில் இருந்து காணாமல் போன சிறுமியின் தாயார் பேட்டி! கோவை ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து மாயமான சிறுமி பொள்ளாச்சியில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்று முன்தினம் ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து 12 வயது சிறுமி மாயமானதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அவரது தந்தை சுதாகரன் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மாநகர காவல் துறையினர் … Read more

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் 16வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்!!

குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் 16வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்!! திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் நகரின் மையப் பகுதியில் உள்ளதாலும் இந்த குப்பைக் கிடங்கை இடம் மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தது. அதன்படி திருவண்ணாமலை அருகே உள்ள தேவனந்தல் பகுதியில் … Read more

600/600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் அடுத்தக்கட்ட மூவ் இதுதானா? வெளிவந்த தகவல்கள்!! 

Is this the next move for Nandini who scored 600/600? Information released!!

600/600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் அடுத்தக்கட்ட மூவ் இதுதானா? வெளிவந்த தகவல்கள்!! திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தினி ஆவார். இவர் தமிழ்நாட்டிலே முதல் முறையாக 12-ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை நிகழ்த்தி பெருமைப்படுத்தியுள்ளார். முதல்வர் அவர்கள் மாணவியை தன் வீட்டிற்கே அழைத்து வந்து பாராட்டினார். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்’ செய்கிறேன் என்று உறுதியளித்தார். அதேப்போலே திரையுலக பிரபலங்கள், போன்ற உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், நந்தினிக்கு வாழ்த்துக்களை … Read more

மளிகை கடை உரிமையாளருக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு!!

மளிகை கடை உரிமையாளருக்கு சராமாரியாக அரிவாள் வெட்டு! தப்பி சென்ற மூவரை தேடும் பணியில் காவல்துறை தீவிரம். சிவகங்கை மாவட்டம், சிவகங்கையின் முக்கிய வீதியில் ஆட்கள் அதிகம் நடமாட்டமுள்ள பகுதியில் மளிகை கடை உரிமையாளரை சராமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்ற மூவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சிவகங்கை மஜித் ரோடு ரயில்வே ஸ்டேசன் அருகே கடந்த இரண்டு தலைமுறையாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை நடத்தி வருபவர் காளிமுத்து மகன் மனோபாலா. இவர் இன்று … Read more

திருவண்ணாமலை நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கு திமுக கவுன்சிலர் மிரட்டல்!!

திருவண்ணாமலை நகர மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் முகத்தை உடைப்பேன், வாயா, போயா என அதிமுக கவுன்சிலர்களை பார்த்து மிரட்டிய திமுக கவுன்சிலர். திருவண்ணாமலை நகர மன்ற கூட்டம் இன்று திருவண்ணாமலை நகராட்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 39 வார்டுகளில் இருந்து திமுக அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்று தனது வார்டுகளில் உள்ள குறைகளை அகற்றுமாறு நகராட்சி சேர்மன் மற்றும் கமிஷனரிடம் முறையிட்டனர். இந்த கூட்டத்தில் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் முறையாக எந்தவித நடவடிக்கையையும் நகராட்சியின் … Read more