வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா சமூக பரவலைத் தடுக்கும் பொருட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் திட்டமிட வேண்டும் எனக் கடந்த மாதம் அறிவித்திருந்தது. பெரும்பாலான IT மற்றும் BPO நிறுவனங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னர் ஊரடங்கு தொடருமா, அல்லது விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. … Read more

பொறியியல் பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு கொடுங்கள் : மின்வாரியத்துக்கு டாக்டர் ராமதாஸ் கெடு!

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

மின் கணக்கீட்டாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகளையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்கட்டண கணக்கீட்டாளர் பணிக்கு 1300 பேரை தேர்ந்தெடுக்க ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பட்டதாரிகள் மட்டுமே இப்பணிக்கு தகுதியானவர்கள் என்றும், பிற பட்டதாரிகள் கணக்கீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. மின் கணக்கீட்டாளர்கள், … Read more

சசிகலா பாணியில் சொகுசு அறையில் டிஎன்பிஎஸ்சி ஜெயக்குமார்.

சசிகலா பாணியில் சொகுசு அறையில் டிஎன்பிஎஸ்சி ஜெயக்குமார். தமிழகம் முழுவதும் பல இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து அரசுப் போட்டித் தேர்வுக்காக தயாராகி வருகின்றனர். இவர்கள் அனைவரின் கோபத்திற்கு காரணமானவர் தான் இந்த இடைத்தரகர் ஜெயக்குமார். ஊழல்,இலஞ்சம்,சொத்துக் குவிப்பு என்ற வார்த்தைகள் சமீப காலமாக தமிழக மக்களுக்கு பழகிப்போன வார்த்தைகளாகி வருகின்றன. பணம் இருந்தால் சிறையில் கூட சொகுசாக இருக்கலாம் என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்ற வீடியோ பலரையும் … Read more

ஐடிஐ மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ஐடிஐ மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருச்சி மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட அரசு தொழிற் பயிற்சி கூடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன்,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல்,தலைமைச் செயலாலர் சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தமிழகம் முழுவதும் உள்ள தொழிற் பயிற்சி நிறுவனங்களில் … Read more

தமிழ் தெரிந்தால் போதும் மாதம் எழுபதாயிரம் சம்பாதிக்கலாம்? வேலைவாய்ப்பை உருவாக்கும் பாடலாசிரியர்..!!

தமிழ் தெரிந்தால் போதும் மாதம் 70 ஆயிரம் சம்பாதிக்கலாம்? வேலைவாய்ப்பை உருவாக்கும் பாடலாசிரியர்..!! தமிழ் மொழியை நன்கு தெரிந்தவர்களுக்கு மாதம் எழுபதாயிரம் சம்பளம் வாங்கும் அளவிற்கு வேலைவாய்ப்பை உண்டாக்கி தருவதாக பிரபல திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான முகநூல், அமேசான், கூகுள் உள்ளிட்ட உலகளாவிய இணைய நிறுவனங்களுக்கு, தமிழில் தகவல்களை உருவாக்கக் கூடிய வேலைப்பாடுகளுக்கு முன்னுரிமை தரும் வகையில் ஆட்களை சேர்த்து வருவதாக கூறியுள்ளார். பிரம்மாண்டமான முறையில் இயக்கி வசூலை குவித்த பாகுபலி … Read more

குரூப் 4 மெயின்ஸ் இப்படி தான் இருக்கும் டிஎன்பிஎஸ்சி விளக்கம்.

குரூப் 4 மெயின்ஸ் இப்படி தான் இருக்கும் டிஎன்பிஎஸ்சி விளக்கம். சமீபத்தில் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ள விடயம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள்.இதில் சாதாரன இளநிலை உதவியாளர் தேர்வு முதல் துணை ஆட்சியர் தேர்வு வரை எல்லா நிலைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதும் அதன் மூலம் தகுதியற்ற நபர்கள் அரசு ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.இதற்கிடையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இரண்டு … Read more

அரசுப் பணிக்காக காத்திருப்பவரா நீங்கள்? விண்ணப்பிக்க தாயாராகுங்கள்

அரசுப் பணிக்காக காத்திருப்பவரா நீங்கள்? விண்ணப்பிக்க தாயாராகுங்கள் போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்கு என நிரந்தரமான ஒரு வேலையை தேடிக்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் உள்ளனர். இருந்தபோதிலும் தமிழக இளைஞர்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வானையம் நடத்தும் தேர்வுகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கின்றனர்.இந்திய அரசிடம் இருந்து நாள்தோரும் பல்வேறு வேலை வாய்ப்பு அழைப்பு வந்தபோதும் அதற்கு விண்ணப்பம் கூட செலுத்தாமல் புறக்கணிப்பதை நாம் கண் கூடாகப் பார்க்க முடிகிறது. இந்த நிலை மாறி மத்திய அரசுப்பணிகளில் தமிழர்கள் கோலோச்ச … Read more

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி வேண்டுமா?

TNPL Recruitment 2020-News4 Tamil Latest Online Tamil News Jobs News in Tamil

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி வேண்டுமா? டிஎன்பிஎஸ்சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயம் மட்டுமே அரசு வேலைக்கு ஆட்கள் தெரிவு அமைப்பாக பலர் கருதுகின்றனர். ஆனால் பல அரசு நிறுவனங்கள் நேரடியாக தங்களுக்கு தேவையான பணியிடங்களை நிரப்பும் நிறுவனங்களாக தமிழகத்தில் உள்ளன. அதில் ஒன்று தான் டிஎன்பில் என அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனம். தற்போது அதில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு … Read more