இன்று மகா சங்கடஹர சதுர்த்தி ! எண்ணியதை எண்ணியவாறே நிறைவேற்றும் விநாயகப்பெருமானை வணங்குங்கள்!

இன்று மகா சங்கடஹர சதுர்த்தி ! எண்ணியதை எண்ணியவாறே நிறைவேற்றும் விநாயகப்பெருமானை வணங்குங்கள்! சங்கடஹர சதுர்த்தி மந்திரம்: ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா பொது பொருள்: உனது பக்தர்கள் வேண்டும் வரத்தை வரமளிக்கும் விநாயகப் பெருமானே உன்னை வணங்குகிறேன். முழு முதற் கடவுளும் நீ, பூத கணங்களுக்கெல்லாம் தலைவனும் நீ. பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்தருள்வாய் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 07.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு என்ன பலன்? வாங்க பார்க்கலாம்- 07.08.202

நாள் : 07.08.2020

தமிழ் மாதம்: ஆடி 23 வெள்ளிக்கிழமை.

நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00
எம கண்டம்: மதியம் 03.00 முதல் 04.30
குளிகன்: காலை 07.30 முதல் 09.00 வரை.

திதி:

சதுர்த்தி திதி இரவு 02.06 வரை அதன் பின் தேய்பிறை பஞ்சமி.

நட்சத்திரம் :

பூரட்டாதி பகல் 1.33 மணி வரை அதன் பின் உத்திரட்டாதி.

பிரபலாரிஷ்ட யோகம் காலை 09.30 வரை பின்பு சித்தயோகம் ஆகும். நேத்திரம் – 2. ஜீவன் – 1.

வாருங்கள் ராசிக்கு போகலாம்!

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பிள்ளைகளால் ஒரு சில தொந்தரவுகள் வரக்கூடும்.உறவினர்கள் உங்கள் வீட்டில் ஏற்படும் சுபகாரியங்களில் தடை செய்வார்கள். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஒத்துழைப்புத் தந்து வந்தால் வீண் பிரச்சினைகள் குறையும். தொழிலில் சற்று முன்னேற்றம் ஏற்படும். தொந்தரவுகள் வரும் நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மிகவும் புத்துணர்வான நாளாகும்.எல்லா வேலைகளையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள்.உங்களின் முயற்சிக்கு உங்களது குடும்பத்தார் பக்கபலமாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது.தொழில் ரீதியாக பெரிய மனிதரின் ஆதரவு கிடைக்கும். வருமானம் பெருகும் நாள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களது உடல் நலம் மிகவும் சிறப்புடன் காணப்படும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டு.அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நபர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணப் பேச்சுகள் கைகூடும். பணவரவு தட்டுப்பாடின்றி வரும். ஆரோக்கியமான நாள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களே இன்று ஒரு புது தெம்புடன் பணியாற்றுவீர்கள்.தொழிலில் எதிர்பார்ப்பது கிடைக்காவிட்டாலும் பெருமளவு பாதிப்புகள் வராது.குடும்பத்தில் ஒரு சில தொந்தரவுகள் வந்து மறையும். பணவரவு ஓரளவு வரும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பார்ப்புகள் நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் எதை செய்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மற்றவர்களுடன் பேசும்பொழுது பார்த்துப் பேசுங்கள். வியாபாரத்தில் பெரிய தொகையை செலுத்தாதீர்கள். பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்படும் நாள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களே இன்று பிள்ளைகள் வழியில் உங்களுக்கு நற்செய்தி வரும்.திருமணப் பேச்சுக்கள் கைகூடி நற்பலனைத் தரும். குடும்ப பிரச்சினை மறையும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். அனுகூலமான நாள்.

துலாம்:

துலா ராசிகாரர்களே இன்று உங்களுக்கு மிகவும் அமோகமாக நாள் என்றே கூறலாம்.தொழில், புகழ்,செல்வாக்கு என அனைத்தும் பெருகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் பலனைத் தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியப் பேச்சுக்கள் நன்மை தரும். அமோகமான நாள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய உடல் ரீதியாக ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு செலவு நேரிடலாம். வரவை விட செலவு அதிகமாகும்.அலுவலகத்தில் மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வாய்ப்பு வந்து நிற்கும். எதிர்பார்த்த உதவி கிட்டும். நிதானமாக இருக்க வேண்டிய நாள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே இன்று செய்யும் எந்த காரியத்திலும் இன்று கவனம் செலுத்துங்கள். உற்றார் உறவினர்களிடம் சண்டை போடுவதை தவிர்க்கவும்.நண்பர்களின் பேச்சுக்களை கேளுங்கள். அது ஒரு நல்ல தீர்வாக அமையும்.வெளியில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை சீக்கிரம் கை வந்து சேரும். வாய்ப்புகள் அமையும் நாள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதார நிலை உயரும்.உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி வீடு வந்து சேரும்.தொழிலில் வேலை பார்ப்பவர்களுக்கு அவரவர் செய்த வேலைக்கு உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் நாள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பொருளாதார வகையில் ஒரு சில நெருக்கடிகள் வரும். எதிர்பார்த்த வங்கிக் கடன் தாமதமாகும். குடும்பத்திலுள்ளவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். அனுகூல பலன்கள் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிட்டும். நெருக்கடியான நாள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களே இன்று நீங்கள் பொறுப்புடன் செயல்பட்டால் முக்கியமான ஒரு சில பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். உறவினர்களின் மகிழ்ச்சியால் வீடு கலைகட்டும். சுபகாரியங்கள் நடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். உத்யோகம் ரீதியாக ஒரு சிலருக்கு வெளியூர் சென்று வர வாய்ப்பு வரும்.

இன்று இந்த ஒரு பூஜையை செய்தால் ஆயுசுக்கும் பணம் அல்ல அல்ல குறையாது!!

பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் வருகின்ற பணத்தை விட செலவு அதிகமாக இருக்கிறது,என்றும் பணம் வருவதும் தெரியவில்லை செலவாகுவதும் தெரியவில்லை என்றும் புலம்பும் வீடுகள் நிறைய இருக்கும்.இந்த பிரச்சனைகளை நீக்க உங்கள் வீட்டில் வருடத்திற்கு ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை ஒரே ஒரு முறை செய்தால் போதும்.வருடம் முழுவதும் பணம் எடுக்க எடுக்க குறையாது. வெள்ளிக்கிழமை நாளன்று அதிகாலை எழுந்தவுடன் தலையுடன் நீராடி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.அதாவது ஒரு வெள்ளி அல்லது செம்பு சொம்பை … Read more

தினம் ஒரு திருக்குறள் – சிறியவரோ? பெரியவரோ? மதிக்க வேண்டும்!

தினம் ஒரு திருக்குறள் குறள் சொல்லும் நீதி குறள் :667 உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து” குறள் விளக்கம்: உருவத்தால் ஒருவர் சிறியவராக இருந்தால் அவரை எள்ளி நகையாடி அவமதிக்க கூடாது. பெரிய தேர் ஓடுவதற்கு ஒரு சிறிய அச்சாணி உதவுவது போல் நாமும் அவர்களை மதிக்க வேண்டும். தாழம்பூ பெரிய மடல்களை கொண்டிருந்தாலும் மகிழம்பூ சிறிய இதழ்களைக் கொண்டு மிகவும் மணத்துடன் இனிமையாக இருக்கிறது. கடல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதன் … Read more

வெகு விமர்சையாகக் கொண்டாடப் பட்ட அடிக்கல் நாட்டு விழா

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியாக இன்று அடிக்கல் நாட்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.இன்று விழாவில் 175 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று உத்தரப்பிரதேசம் அயோத்திக்கு 29 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தார்.இவர் தங்க நிறத்திலான குர்தாவையும் வெள்ளை நிற வேட்டியையும் அணிந்து கொண்டு விழாவில் பங்கேற்றார். கோயில் கட்டும் பணி தொடங்கும் வேலையாக அயோத்தியில் வெள்ளியாலான செங்களை நட்டுவைத்து பணியை தொடங்கி வைத்தார் … Read more

ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க முடியவில்லையா:?அப்போ இந்த தெய்வ வழிபாட்டை செய்து பாருங்கள் எப்படியாப்பட்ட வேலையும் உங்கள் கைவசம்!!

ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் அவர்களின் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றால் அவர்களின் குடும்பத்திலேயே சந்தோசம் நிலவாது.மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கையே வெறுப்பாகிவிடும்.நல்ல வேலை கிடைக்க நிரந்தரமான வேலை கிடைக்க இந்த தெய்வங்களை வழிபடுங்கள்.நல்ல வேலைக்கும்,நிரந்தரமான வேலைக்கும் தெய்வவழிபாடு ஒரு பாலமாக இருக்குமே தவிர தெய்வ வழிபாடு செய்தாலே எல்லாம் கிடைக்கும் என்பது முட்டாள்தனமான எண்ணமாகும். தெய்வத்தை எந்த அளவுக்கு நம்பி வழிபாடு செய்கிறோமோ அதே அளவுக்கு அந்த வேலைக்கு உண்டான முயற்சியையும் … Read more

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? இன்றைய ராசிபலன்-05.08.2020

எந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 05.08.2020 நாள் : 05.08.2020 தமிழ் மாதம்: ஆடி 21 புதன்கிழமை. நல்ல நேரம்: காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 12.00 முதல் 1.30 வரை எம கண்டம்: காலை 07.30 முதல் 09.00 வரை குளிகன்: பகல் 10.30 முதல் 12.00 வரை திதி: துதியை திதி … Read more

அனைவருக்கும் புதன்கிழமை இனிய காலை வணக்கம்! சகல சௌபாக்கியமும் பெற விநாயகரை வணங்குங்கள்!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.புதன்கிழமை அன்று விநாயகரை வழிபட்டு எண்ணிய காரியங்கள் தடையின்றி நிறைவேற விநாயகரை வணங்கி அருள் பெறுங்கள். கணேச காயத்திரி மந்திரம்:‘ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி நந்தோ தந்தி ப்ரசோதயாத்’

இனிய காலை வணக்கம்! முருகனின் அருள் குறைவின்றி அனைவருக்கும் கிட்டட்டும்!

வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை! குகனுண்டு குறைவில்லை! கந்தன் இருக்க பயமேன்! கந்தர் துணையுடன் செவ்வாய்க்கிழமை இனிய காலை வணக்கம். முருகனின் அருள் குறைவின்றி அனைவருக்கும் கிட்டட்டும்.

உங்கள் வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்கவில்லை என்று கவலைப்படுபவர்களா நீங்கள்:?அப்போ இதை மட்டும் செய்து பாருங்கள்!!!

பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் வருகின்ற பணத்தை விட செலவு அதிகமாக இருக்கிறது,என்றும் பணம் வருவதும் தெரியவில்லை செலவாகுவதும் தெரியவில்லை என்றும் புலம்பும் வீடுகள் நிறைய இருக்கும்.இந்த பிரச்சனைகளை நீக்க உங்கள் வீட்டிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ இந்த மாதிரி விளக்கை ஏற்றி வையுங்கள் அந்த மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்க பெற்று வீட்டில் செல்வம் சேரும். அது என்ன விளக்கு எப்படி ஏற்றுவது? உப்பு விளக்கு ஏற்றி தினமும் பூஜை செய்தால் நம் வீட்டில் … Read more