இன்றைய முக்கிய செய்திகள் 08.07.2020

1.கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நடைமுறைகளை குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு. சென்னையை சேர்ந்த புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவர் சைமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் டி.பி. சத்திரத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இதனையடுத்து வேலங்காடு கல்லறையில் அடக்கம் செய்ய வந்தவர்களையும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் அங்குள்ள மக்கள் … Read more

வெட்டிவேர் மூலம் தயாரிக்கப்பட்ட முகக்கவசம்! உதகை பிசியோதெரபிஸ்டின் புதிய முயற்சி!

கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது.இந்நிலையில் உதகையில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் வெட்டிவேர் மூலம் முகக்கவசத்தை தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு இன்னும் எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் கொரோனாவிலிருந்து நம்பை பாதுகாத்து கொள்ள முகக்கவசம் மற்றும் சானிடைசரை பயன்படுத்துகிறோம்.இந்நிலையில் ஒரு புதிய முயற்சியாக பிசியோதெரபிஸ்ட் ஐஸ்வர்யா என்பவர் முகக்கவசத்தை வெட்டிவேர் மூலம் தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து … Read more

கன்னட நடிகர் திடீர் தற்கொலை.! ஊரடங்கால் மன அழுத்தம் காரணமா.?

கன்னட தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலம் ஆனவர் சுஷீல் கவுடா. அந்தப்புரா என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பரிட்சயமானார். மாண்டியாவில் வசித்து வந்த சுஷீல் உடற்பயிற்சி போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது 30 வயதில் நல்ல உடற்கட்டை பயிற்சி மூலம் வைத்திருந்தார். இந்த சூழலில் நேற்று சுஷீல் கவுடா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது திடீர் தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இளம் வயதில் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு என்னதான் … Read more

“பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” தமிழகம் முழுவதும் தடை; முற்றுப்புள்ளி வைத்த சாத்தான்குளம் சம்பவம்!

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்ல நட்பை ஏற்படுத்தும் வகையில் 1993 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அமைப்பு முதன்முதலாக ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள காவலர்கள் வாகன தணிக்கை, குற்றம் நடைபெறும் இடம் குறித்த தகவல், குற்றவாளிகள் பற்றிய தகவல்களை வழங்கி வந்தனர். இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது கடும் எதிர்ப்பு வலுத்தன. மேலும் இந்த வழக்கில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் … Read more

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது! மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய இணை அமைச்சரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் வழங்கியுள்ளார்.   தற்போது மின்சார சட்டதிருத்த மசோதாவை கொண்டு வரும் முனைப்பில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த மசோதா குறித்து முன்பே அனைத்து மாநிலங்களிலும் கருத்து கேட்கப்பட்டது. அப்போதே விவசாயம் மற்றும் ஏழை மக்களுக்கான மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது என்று தமிழக முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை கடிதம் அனுப்பினார்.   இந்த நிலையில் … Read more

மூச்சுத்திணறல் காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

மூச்சுத்திணறல் காரணமாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர்; இணையத்தில் குவியும் பாராட்டு..!!

சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஐதராபாத்தில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்ல விமானம் மூலம் செல்ல தயாரான நிலையில் காவல்துறையிடம் அவரது மகள் கடந்த 29 ஆம் தேதி மாம்பலம் காவல்நிலையத்திற்கு தொடர்பு கொண்டு, தனது அம்மா வசந்தா தி.நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து இருப்பதாகவும், கொரோனா ஊரடங்கால் அவரை அழைத்து வரவில்லை என்றும், அவருக்கான இ-பாஸ் மற்றும் விமான பயணசீட்டும் எடுத்துள்ளதால் … Read more

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணை??

ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் தனித்தனியாக இருந்த போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதில்,ஓபிஎஸ் அணியை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமி-க்கு எதிராக வாக்களித்தனர்.இந்த நிலையில் எதிர்த்து வாக்களித்த 11 பேர் மீதும் அதிமுக தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக, கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இருந்தபோதிலும்இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை … Read more

ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை !

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றனர். இதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக எரிபொருள் பயன்பாடு குறைந்ததால் கச்சா எண்ணெயின் விலை குறைந்தது. இதனால் கடந்த மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் பெட்ரோல் டீசல் விலையை மாற்றாமல் மத்திய மாநில அரசுகள் வரியை மட்டும் … Read more