திமுக – பாஜக – அதிமுக கூட்டணி அலசல்! இழுபறியில் ம.நீ.ம!

0
198
#image_title

திமுக – பாஜக – அதிமுக கூட்டணி அலசல்! இழுபறியில் ம.நீ.ம!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தொகுதி பங்கீடு குறித்து மல்லிகார்ஜுன கார்கே அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய இருந்த நிலையில் கடைசி நேரத்தில் யாரும் வரவில்லை என்பதால் இணைப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் பாஜகவினர் பிள்ளை பிடிப்பவர்கள் போல் அலைகின்றனர் என விமர்சித்த அவர் பாஜக எம்எல்ஏக்கள் இருவர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைய இருக்கின்றனர் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக யாரையும் தாமாக அழைக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

இதனை அடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணியை இணைந்துள்ள நிலையில், அடுத்ததாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாஜகவுடன் இணைய இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் அறிவித்துள்ளார்.

தேமுதிகவிற்கு ராஜ்யசபை சீட் வழங்காததால் அதிமுக கூட்டணியில் இழுபறி நீட்டித்து வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சி இரண்டு எம் பி தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், அதில் திமுக ஒரு தொகுதிகளை மட்டும் வழங்க முன் வருவதாகவும் உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

விசிக – திமுக கூட்டணியில் விரைவில் உடன்பாடு ஏற்படும் எனவும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே திமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த டெல்லி சென்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகள் கொடுத்தால் அந்த தொகுதிகளில் யார் யார் வேட்பாளர்கள் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு யார் வேட்பாளர்கள் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனை அடுத்து சென்னை திரும்பும் செல்வ பெருந்தகை ஓரிரு நாட்களில் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Preethi