அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!!

0
53
#image_title

அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!!

கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து முரண்பாடு காரணம் என்று சொல்லப்பட்டாலும் தொகுதி பங்கீடும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையாக இரு கட்சிகளுக்கும் இடையே இருந்து வந்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவது,ஆட்சி பொறுப்பை யார் ஏற்பது உள்ளிட்ட முரண்பட்ட காரணங்களால் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது.இந்த கேப்பில் தான் பாஜக உள் நுழைந்து அதிமுகவில் நிலவி வந்த பிரச்சனையை தீர்த்து வைத்தது.இதனால் அதிமுக – பாஜகவிடையே இணக்கம் ஏற்பட்டது.இந்த இணக்கம் கடந்த 2019 லோக்சபா தேர்தல் மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்கும் நிலையை உருவாக்கியது.

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக பெரிய கட்சி,பாஜக வளர்ந்து வரும் கட்சி.தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அலை அதிகமாக வீசத் தொடங்கிய நேரத்தில் அக்கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் சிறுபான்மையின மக்களின் ஓட்டு திமுக பக்கம் சென்றது.இதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்தது.அதன் பின்னர் அதிமுக உட்கட்சி விவகாரத்தால் ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான் என்ற விமர்சனம் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.இதனால் இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வாக்கு வங்கி சற்று சரிய வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.அண்ணாமலையின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் அதிமுக – பாஜகவிடையை வார்த்தை மோதல் ஏற்பட்டு கூட்டணி முறையும் நிலை உருவானது.

பாஜகவுடன் இனி எப்பொழுதும் கூட்டணி இல்லை.நன்றி மீண்டும் வராதீர்கள் என்று அதிமுக தலைமை அறிவித்தது.இதை சற்றும் எதிர்பார்க்காத பாஜக பெரும் அதிர்ச்சி அடைந்தது.சொல்லப்போனால் பாஜகவை விட திமுகவுக்கு தான் இந்த முடிவு இடி போல் விழுந்தது.

காரணம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் இதனால் தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினரின் ஓட்டு திமுகவுக்கு தான் விழும் என்று திரு.ஸ்டாலின் கனவு கண்டிருந்தார்.அந்த கனவில் மண்ணை அள்ளி போடும் விதமாக எடப்பாடியார்,பாஜகவுடனான கூட்டணியை முறித்து அதிரடி காட்டி இருக்கிறார்.

கூட்டணி முறிவிற்கு பிறகு கணிக்க முடியாத பல அதிரடி நடவடிக்கைகளை காட்டி வரும் எடப்படியார் அவர்கள் திமுக என்ற அசைக்க முடியாத தூணை ஆட்டி பார்த்து வருகிறார்.திமுகவின் வெற்றிக்கு காரணம் சிறுபான்மையினரின் ஓட்டு தான்.இந்த ஓட்டு வங்கியை வைத்திருப்பது திமுக உடன் இருக்கும் முஸ்லீம் கட்சிகள் மற்றும் காங்கிரஸ்.

இந்நிலையில் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை மீண்டும் பெறுவதற்காக அவர்களை கவரும் வண்ணம் எடப்பாடியார் தொடரந்து ஆக்சனில் ஈடுபட்டு வருகிறார்.முஸ்லீம் மக்களின் கவனத்தை ஈர்க்க அதிமுகவின் மூத்த நிர்வாகியான அன்வர் ராஜாவை அக்கட்சியின் செயலாளராக மாற்றினார் எடப்பாடியார்.இவரின் இந்த நடவடிக்கையால் முஸ்லீம் மக்கள் ஓட்டு கணிசமாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவும்,முஸ்லீம் கட்சிகளின் ஆதரவை பெரும் விதமாகவும் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

இதனால் தமிமுன் அன்சாரி,எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த முபாரக் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.அதுமட்டும் இன்றி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதனால் தனது அரசியல் தந்திரத்தால் திமுகவை ஆட்டம் காண வைக்கிறார் எடப்பாடி என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.