வந்துவிட்டது அவசரகால உதவிக்கான வாகன உதவி!! தொடங்கி வைத்த முதல்வர்!!

0
41
Emergency vehicle assistance has arrived!! The Chief Minister who started!!
Emergency vehicle assistance has arrived!! The Chief Minister who started!!

வந்துவிட்டது அவசரகால உதவிக்கான வாகன உதவி!! தொடங்கி வைத்த முதல்வர்!!

அவசர கால மீட்புக்கான வீரா வாகனத்தின் பயன்பாட்டினை முதலமைச்சர் என்று தொடங்கி வைத்தார்.

சென்னை போக்குவரத்து காவல்துறையில் விபத்து சிக்கியவர்களை வாகனங்களில் இருந்து மீட்பதற்காக அவசரகால மீட்புக்கான வீரா வாகனத்தின் பயன்பாட்டினை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அங்கமாக சாலை விபத்துகளில் சிக்கிக்கொண்ட வாகனங்களில் சிக்கிக் கொள்பவர்களின் உயிரை காப்பதற்கு முன்னோடியாக முதல் முயற்சியாக மீட்பு வாகனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே முதல் முறையாக திட்டமிடப்பட்டுள்ள தனித்துவமான திட்டம் ஆகும்.

விபத்தில் சிக்கி சேதம் அடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்பவர்களை தேவையான உபகரணங்களுடன் மற்றும் பயிற்சி பெற்ற காவல் குழுவினர் உதவியுடன் இதன் மூலம் மீட்கலாம். இது ஒரு முன்னோடி திட்டம் ஆகும். இதற்கு பயன்படும் வாகனத்திற்கு வீரா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் பயன்பாட்டினை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார் இது ஹூண்டாய், க்ளோவிஸ், மற்றும் இசுசூ மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக பொறுப்பு திட்டமாகும். அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, மற்றும் மெட்ராஸ் இந்திய தொழில் நுட்ப கழகம் ஆகியவை தங்களது நிபுணத்துவம் பங்களிப்பை அளித்துள்ளன.

அதன்படியே சாலை விபத்தில் சிக்கியவர்களை சேதமடைந்த விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்காக வீரா என்ற வாகனத்தின் பயன்பாட்டினை சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி  வைத்ததோடு மட்டுமில்லாமல் காவல்துறையினரின் செயல்முறை விளக்கத்தையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, உள்துறை முதன்மை செயலாளர் அமுதா, போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப்ராய் ரத்தோர், உள்பட பல அரசு உயர் அலுவலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.