கன மழை அறிவிப்பு! இந்த மாவட்டங்கள் மிகவும் பத்திரமாக இருங்கள்?

0
144
#image_title

சென்னையில் டிசம்பர் நான்காம் தேதி என்று வந்த புயலை அடுத்த இன்று சென்னையை தவிர்த்த பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.

 

சென்னை வானிலை அறிவிப்பு மையத்தின் தகவல் படி கன்னியாகுமாரி தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று தினத்திலிருந்து கன மழை பெய்து வருகிறது.

 

ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.

 

 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமை மழை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தென் இலங்கைக் கடற்கரையிலிருந்து சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.1 கி.மீ வரை பரவியுள்ள சூறாவளி சுழற்சியின் விளைவே காரணம்.

 

சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

அதிகபட்ச வெப்பநிலை 30°C-31°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°C ஆகவும் இருக்கும்.

author avatar
Kowsalya