இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் வாயுத் தொல்லை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!!

0
66
#image_title

இதை 1 கிளாஸ் பருகினால் இந்த ஜென்மத்தில் வாயுத் தொல்லை என்ற பேச்சுக்கு இடம் இருக்காது!!

நம்மில் பலர் வாயு தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வருகிறோம். இந்த வாயு பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவர்களால் பொது வெளிகளில் நீண்ட நேரம் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு எளிதில் தள்ளப்பட்டு விடுகிறார். இதனை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது மிகவும் முக்கியம் ஆகும்.

வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:-

*மலச்சிக்கல்

*செரிமானக் கோளாறு

*துரித உணவு

தேவையான பொருட்கள்:-

*ஓமம் – 2 தேக்கரண்டி

*ஜீரா(சீரகம்) – 2 தேக்கரண்டி

*பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி சீரகம் மற்றும் 2 தேக்கரண்டி ஓமம் சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். அடுத்து 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து அடுப்பை அணைக்கவும்.

பின்னர் வறுத்த பொருட்களை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். இதை
நன்கு பொடி செய்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். இதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி அடுப்பை அணைக்கவும். இந்த சூடு நீரை ஒரு டம்ளருக்கு ஊற்றி தாயார் செய்து வைத்துள்ள பொடியை 2 தேக்கரண்டி அளவு போட்டு நன்கு கலந்து பருகவும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இவ்வாறு தொடரந்து பருகுவதன் மூலம் வாயுத் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.