பச்சை பயறு லட்டு இப்படி செய்து கொடுத்தால் கேட்டு வாங்கி உண்பார்கள்!!

0
35
#image_title

பச்சை பயறு லட்டு இப்படி செய்து கொடுத்தால் கேட்டு வாங்கி உண்பார்கள்!!

நாம் அதிகம் உணவில் பயன்படுத்தும் பருப்பு வகைகளில் பச்சை பயறு முக்கிய பங்கு வகிக்கிறது.இதில் அடங்கியுள்ள புரோட்டீன்,கார்போஹைட்ரேட்,பைபர் போன்றவை நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் வழங்கும் தன்மை கொண்டது.இப்படி பல நன்மைகளை நம் உடலுக்கு அள்ளி கொடுக்கும் பச்சை பயரில் லட்டு எப்படி செய்ய வேண்டுமென்ற முறையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

பச்சை பயறு – 200 கிராம்

நாட்டு சர்க்கரை – 250 கிராம்

வேர்க்கடலை – 100 கிராம்

ஏலக்காய் – 4

உப்பு – சிறிதளவு

நெய் – 3 ஸ்பூன்

செய்முறை:-

1.ஒரு பாத்திரத்தில் பச்சை பயறு கொட்டி தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

2.ஒரு கடாயில் அவற்றை சேர்த்து நன்றாக மனம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

3.அவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

4.அரைத்து வைத்துள்ள பச்சை பயறு மாவு கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

5.பின்னர் மிக்சி ஜாரில் 250 கிராம் நாட்டு சர்க்கரை,4 ஏலக்காய்,ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

6.அதே மிக்சி ஜாரில் 100 கிராம் வறுத்த வேர்க்கடலையை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

7.வறுத்து வைத்துள்ள பச்சை பயறு மாவு கலவையுடன்,வறுத்த வேர்கடலை பொடி,பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.இதனுடன் காய்ச்சிய 3 கரண்டி நெய் சேர்த்து கிளர வேண்டும்.

8.இதனை நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுத்து கொள்ள வேண்டும்.